நாளை முதல் மக்களை சந்திக்கிறார் விஜய்..! தவெக -வின் வியூகம் என்ன!?

விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்...
Vijay -
Vijay
Published on
Updated on
2 min read

2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய் -ன் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என நல்ல ஒரு பப்ளிசிட்டியோடே வந்தது. 

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல  காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முழுமூச்சாக  தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்,  தவெக சார்பில் மதுரையில் மிகப்பெரிய 2 -வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் மக்களை நிச்சயம் சந்திப்பேன் என பேசியிருந்தார். அதன்படியே திருச்சியில் தொடங்கி தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. வருகிற 13 -ஆம் தேதி துவங்கி டிசம்பர் 20 வரியிலும் இவரின் சுற்றுப்பயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரின் இவரின் பயன் தேதிகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் வருகின்றன.

ஏற்கனவே விஜய் ‘work from home’ அரசியல் செய்கிறார் என்ற பேச்சு எழுந்த நிலையில், அவரின் மக்கள் சந்திப்புதான் பலருக்கும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த பிரச்சாரமம் வெறும் சனிக்கிழமைகளில் மட்டும் வருவதால் இதுவும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஆனாலும் விஜய் -க்கு இருக்கும் மாஸ் எப்போதும் குறையப்போவது இல்லை. அவரை பார்க்க வரும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கும். இந்தப் பயணத்தில் அவர் பொதுமக்களையும், கட்சியின் நிர்வாகிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார். ஆனால் அவருக்கு 30 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சாரத்தில் வெறும் 30 நிமிடங்கள் ஒரு அரசியல் தலைவருக்கு பத்தாது. இது அனைவருக்கும் தெரியும். உண்மையில் பார்த்தால் விஜய் -க்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த நெருக்கடிகளை சமாளித்து அவர் அரசியல் செய்ய வேண்டும். 

திருச்சி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நாளை தொடங்கும் இந்த பயணத்தில் அவர் பேசப்போகும் பேச்சுக்கள்தான் அவரின் வருங்கால அரசியலை பிரதிபலிக்கும்.

இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வது, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவது, மற்றும் வரவிருக்கும் தேர்தல்களுக்கு கட்சியை தயார்படுத்துவது என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com