

2023-ம் ஆண்டில், லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தின் 19 வயது நடன மங்கை, ஒரு காரின் பின் இருக்கையில் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்புணர்விற்கு பிறகு மேடிசன் புரூக்ஸை (உயிரிழந்தவர்) அந்த நபர்கள் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு, அவர் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது தடுமாறிச் சென்றுள்ளார். அப்போது, வேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புரூக்ஸைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர்களில் ஒருவரான, 21 வயது டெஸ்மண்ட் கார்ட்டரின் விசாரணை, வரும் ஆகஸ்ட் 17 அன்று தொடங்க உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
புரூக்ஸ் குடும்பத்தினரும் அவர்களது ஆதரவாளர்களும், மறைந்த புரூக்ஸை நினைவுகூரும் வகையில் பொது நிகழ்ச்சிகளிலும் நீதிமன்ற விசாரணைகளிலும் இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்து வந்துள்ளனர். இதே ஆடையை குற்றவாளிகள் அணிய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கைவோன் வாஷிங்டன் மற்றும் கேசன் கார்வர் ஆகியோருடன் கார்டரும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஒரு மதுபான விடுதியில் புரூக்ஸுடன் ஒன்றாக மது அருந்திய பிறகு, காரில் வைத்து புரூக்ஸைத் பாலியல் வன்கொடுமை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், புரூக்ஸை பாலியல் வன்புணர்வு செய்ததை அந்த ஆண்கள் மறுத்ததோடு, காரில் புரூக்ஸின் சம்மதத்துடன்தான் தங்கள் அவருடன் உடலுறவு கொண்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், அந்த 3 ஆண்களால் நடைபாதையில் தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்பட்ட புரூக்ஸை, ஓடும் வாகனங்களுக்குள் தடுமாறிச் செல்லும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், அந்தப் பதின்மவயது பெண்ணின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு .319% ஆக இருந்ததாகவும், இது சட்டப்பூர்வமான வாகனம் ஓட்டும் வரம்பை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது புரூக்ஸ் நான்கு வழிச் சாலையில் நடந்து சென்றபோது, ஒரு கார் அவர் மீது மோதியுள்ளது.
கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், கார்வர் மற்றும் கார்ட்டரின் வழக்கறிஞர்கள், புரூக்ஸின் உடலில் காணப்பட்டதாகக் கூறப்படும் காயங்கள் பாலியல் வன்கொடுமையுடன் ஒத்துப்போகும் காயங்கள் என்பது ஏற்பட்டவை அல்ல என்று வாதிட்டுள்ளார். மேலும், அதற்குப் பதிலாக புரூக்ஸ் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு மற்றொரு மாணவருடன் பரஸ்பர சம்மதத்துடன் ஆக்ரோஷமான உடலுறவில் ஈடுபட்டதாகவும், அதுவே அவரது காயங்களுக்குக் காரணம் என்றும் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த வாதமானது அரசு தரப்பு வழக்கறிஞரால் கண்டிக்கப்பட்டது. மேலும், அந்த மனு பின்னர் ஒரு நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜனவரி 15, 2023 அன்று புரூக்ஸ் மீது மோதிய வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை, ஏனெனில் அவர் அந்த நேரத்தில் போதையில் இருக்கவில்லை மேலும் அவர் சற்றும் தாமதிக்காமல் அவசர சேவைகளைத் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்படவில்லை.
புரூக்ஸைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர்களில் ஒருவரான வாஷிங்டன், மற்றொரு இளம் பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சட்டப்பட்டுள்ளார். புரூக்ஸை அந்தக் குழு சந்தித்த அதே மதுபான விடுதியான ரெஜிஸில், 2023 அக்டோபரில் அவர்கள் சந்தித்த பிறகு, வாஷிங்டன் தன்னைத் பாலியல் ரீதியாக அப்பெண் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண், வீட்டிற்குச் செல்ல முடியாத அளவுக்கு அதிக போதையில் இருந்துள்ளார். அப்போது வாஷிங்டன் தன்னுடைய நண்பர்களில் ஒருவருக்குச் சொந்தமான குடியிருப்பில் தங்க முடியுமா? என்றும் கேட்டுள்ளார். அங்குதான் பாலியல் வன்கொடுமை நடந்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது நீதிமன்றத்தில் இவர்களுக்கான இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.