"மாணவியுடன் ஹோட்டலில் அறை.. தனிமையில் உல்லாசமாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்" - காதல் என்ற பெயரில் 'Toxic'! 16 ஆண்டுகள் தண்டனையா?

45 வயதான அந்த நபர், ஜூலை 23 அன்று, சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
Schoolgirl sexual abuse
Schoolgirl sexual abuse
Published on
Updated on
2 min read

சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர், தனது மாணவி சிறுமியாக இருந்தபோது அவரிடம் பாலியல் செயல்களில் ஈடுபட்டதற்காக, செப்டம்பர் 16 அன்று 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் மாணவிக்கு 14 முதல் 15 வயதுக்குள் இருந்தபோது, ​​உடற்கல்வி ஆசிரியர் அந்த சிறுமியிடம் காதல் என்ற பெயரில் பின்தொடர்ந்ததாக அறிக்கை ஒன்று குறிப்பிட்டிருந்தது. 45 வயதான அந்த நபர், ஜூலை 23 அன்று, சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

தண்டனை வழங்கும் போது மேலும் 12 பாலியல் குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ​​அந்த நபர் சிறிது நேரம் மௌனமாக இருந்து, பின்னர் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட உண்மைகளின் அறிக்கையைத் தாம் ஏற்றுக்கொள்வதாகப் பதிலளித்துள்ளார். அந்த முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் 2022-ல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கற்பித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரத் தொடங்கியுள்ளனர். அங்கிருந்துதான் இது தொடங்கியுள்ளது.

அந்த நபர் சிறுமியிடம் தனது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி, தனது காதலியாக இருக்கும்படி மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். ஒரு ஆசிரியருடன் உறவில் இருப்பது தவறு என்பதை அறிந்த சிறுமி, அதுபற்றி யோசிக்க தனக்கு அவகாசம் தேவை என்று கேட்டுள்ளார்.

அவர்களுக்குள் 28 வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அது சிறுமியின் படிப்பைப் பாதிக்காத வரையில் எதுவும் தவறில்லை என்று அந்த நபர் சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்த பெண் அவரின் காதலை ஏற்றுள்ளார். மேலும் காலப்போக்கில், அவர்கள் ஒரு காதல் உறவில் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் என்று அந்த சிறுமி நம்பியுள்ளார்.

பின்னர் 2022, செப்டம்பர் 11 அன்று, இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். பின்னர் ஜனவரி 29 அன்று, அந்த முன்னாள் ஆசிரியர் அந்த சிறுமியை கட்டுப்படுத்தும் நோக்கில் நடந்துள்ளார். இதனால், அந்த சிறுமி அந்த உறவை முறித்துக்கொண்டுள்ளார். அதற்கு அந்த முன்னாள் ஆசிரியர் அழுததோடு, மிரட்டவும் செய்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் யாருடனாவது பழகுகிறாரா? என்பதை அறிந்துகொள்வதற்காக, அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி சிறுமியை கண்காணித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி முன்னாள் ஆசிரியருடன் உறவில் இருந்ததை அறிந்த பிறகு, சிறுமியின் நண்பர்களில் ஒருவர் இறுதியில் பள்ளி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். விசாரணையின் போது, ​​சிறுமியை தகாத முறையில் தொட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் சிறுமியுடன் பேச பயன்படுத்திய டெலிகிராம் செய்திகளையும் நீக்கியுள்ளர்.

இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததால், அந்த நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர்கள் முதல் முறை ஹோட்டலுக்கு சென்றதில் இருந்து அடுத்த மூன்று மாதங்களில் மேலும் ஐந்து ஹோட்டல் அறைகளை அவர் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. "அவர், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனியாக இருந்த இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அவருக்கு எதிராக எண்ணற்ற பாலியல் குற்றங்களைச் செய்துள்ளார்" என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com