“தலை இல்லாமல் கிடந்த 17 வயது சிறுமியின் சடலம்” - வண்டியில் அழைத்து சென்ற வாலிபர்.. காட்டுக்குள் நடந்தது என்ன?

சிறுமியின் குடும்பத்தினர், நரசிங்கர்க் பகுதியைச் சேர்ந்த அனுராக் அங்கித் என்ற இளைஞர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்..
“தலை இல்லாமல் கிடந்த 17 வயது சிறுமியின் சடலம்” - வண்டியில் அழைத்து சென்ற வாலிபர்.. காட்டுக்குள் நடந்தது என்ன?
Published on: 
Updated on: 
2 min read

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி, ஆறு நாட்களுக்குப் பிறகு காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் (செப் 30) -ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சுமார் ஆறு நாட்களுக்குப் (அக் 07) பிறகு மலாவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் சிறுமியின் பள்ளிப்பை ஆகியவற்றையும் போலீசார் மீட்டுள்ளனர்.

சிறுமியின் குடும்பத்தினர், நரசிங்கர்க் பகுதியைச் சேர்ந்த அனுராக் அங்கித் என்ற இளைஞர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிக்கும் அந்த இளைஞருக்கும் தொடர்பு இருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிறுமியை அந்த இளைஞர் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

ஆனால், இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக, சிறுமியை அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் அந்த இளைஞர், சிறுமி கொல்லப்பட்ட அதே நாளில் மலாவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கும் சிறுமியின் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு இளைஞரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமியைத் தேடும் பணியின்போது, அப்பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒரு காட்சியில், ஓர் இளைஞர் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வதும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் சிறுமியுடன் மற்றோர் இளைஞர் செல்வதும் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கிடைத்த காட்சிகளில் மூவரும் ஒன்றாகச் செல்வதும், திரும்பி வரும்போது இரண்டு இளைஞர்கள் மட்டுமே காணப்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மொபைல் போன் இருப்பிடம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தடயங்களை ஆய்வு செய்து காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்தினர். அப்போது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, இளைஞரின் சாலை விபத்து மரணத்துக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com