“தனிமையில் தாய்.. மகன் கண்முன்னே நடந்த கொடூரம்!” – 3 மாத கள்ளக்காதலால் மதுரையில் நடத்த பகீர் கொலை சம்பவம்!

ஆண்டிபட்டி பங்களா அருகே உள்ள பெரியார் பாசன கால்வாய் கரையோரம் தனியாக வருமாறு காட்டு ராணியை
vadipatti murder case
Published on
Updated on
1 min read

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மூன்று மாத கள்ளக்காதல் விவகாரம் கொடூரக் கொலையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகம் சிதைந்த நிலையில் கால்வாய் கரையில் கிடந்த டிராக்டர் டிரைவரின் மரணம், ஆரம்பத்தில் விபத்தாக கருதப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணைகு பிறகு, அதிர்ச்சிகரமான கள்ளக்காதல் பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சின்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த வைரமணி (46) என்பவர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகி மூன்று மகன்கள் உள்ள நிலையில், அவரது மனைவி இவரை பிரித்து கேரளாவில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் காட்டு ராணி (38) என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. காட்டு ராணியும் அதே செங்கல் சூளையில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த தொடர்பின் காரணமாகவே வைரமணியின் மனைவியின் அவரை பிரித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த பழக்கம் குறித்து காட்டு ராணியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் வேலைக்குச் செல்வதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், வைரமணி தொடர்ந்து அவரை தொடர்புகொண்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை, ஆண்டிபட்டி பங்களா அருகே உள்ள பெரியார் பாசன கால்வாய் கரையோரம் தனியாக வருமாறு காட்டு ராணியை வைரமணி அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு தனிமையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மது அருந்த வந்த காட்டு ராணியின் 17 வயது மகனும், உறவினரான ஹரிதரன் (20) என்பவரும் அவர்களை பார்த்துள்ளனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த இருவரும், “ஏன் இங்கு வந்தாய்?” என காட்டு ராணியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, “அவர் என்னை மிரட்டி வரவழைத்தார்” என காட்டு ராணி கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் சில நிமிடங்களில் கைகலப்பாக மாறியது. ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற காட்டு ராணியின் மகனும் ஹரிதரனும், வைரமணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த வைரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் முகம் சிதைந்த நிலையில் அவரது உடல் கால்வாய் கரையில் கிடந்தது.

முதலில் இது சாலை விபத்து என கருதிய வாடிப்பட்டி போலீசார், உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்காதல் தொடர்பே இந்தக் கொலையின் பின்னணியாக இருப்பது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டு ராணி, அவரது 17 வயது மகன் மற்றும் ஹரிதரன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட இந்த கொலை சம்பவம், வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com