“6 வயது குழந்தை வாயில் பேனாவை வைத்து குத்தி..கத்தியால் கழுத்தை அறுத்து” வளர்ப்பு தந்தையின் வெறிச்செயல்..!!
விருதுநகர் அருகே மாணிக்கம் நகரை சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 22). இவரது கணவர் மருதுபாண்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில்தான் மாரீஸ்வரி கடந்த ஆண்டு செல்வம் (32) என்ற நபரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு விருதுநகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மாரீஸ்வரியின் 6 வயது மகன் திருச்சுழியில் உள்ள மாரீஸ்வரியின் பெற்றோர் வீட்டில் தங்கி 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
திருவிழாவிற்காக மாரீஸ்வரி தனது மகனை அழைத்து வந்த நிலையில் வீட்டில் இருந்த தனது மகன் திடீரென மயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் மாரீஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்த நிலையில் பந்தேனந்தல் அருகே காட்டுப்பகுதியில் கழுத்து முகம் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் விசாரணையில் மாரீஸ்வரியின் 2வது கணவர் வீட்டில் இருந்த சிறுவணை அழைத்துச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கியதுடன், சிறுவனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுவணை சத்தம் போடக்கூடாது என்பதற்காக வாயில் பேனாவை குத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்வத்தின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து எதற்காக சிறுவணை கொலை செய்ய முயற்சித்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.