ஹைதராபாத்தில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 48 வயது டெய்லருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 -ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி மாதுகர் என்ற டெய்லர் தனது பக்கத்து வீட்டு சிறுமிகள் இருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஆடை தைத்து தருவதாக கூறி, அக்காவை மட்டும் வெளியில் நிற்க வைத்துவிட்டு நான்கு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் உடலில் இருந்த அடையாளங்களை வைத்தும், சிறுமியின் அக்கா சொன்ன தகவல்களை கேட்டு ஆடிப்போன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணையின் போது, குற்றவாளி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், சிறுமியின் பெற்றோர் டெய்லரிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், டெய்லர் அதை திருப்பிக்கேட்டதால் தான் இப்படியொரு பொய்யான புகாரை கொடுத்துள்ளதாகவும் வாதிட்டார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஆதரிக்கும் எந்த ஆதாரத்தையும் குற்றவாளி சமர்ப்பிக்கத் தவறிய நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து டெய்லர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
மேலும் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்த சிறுமிக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் சட்ட சேவைகள் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.