
தென்காசி மாவட்டம், கீழப்புலியூர், பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே பட்டப்பகலில், குத்தாலிங்கம் (32) என்ற வாலிபரை மர்ம நபர்கள் தலை துண்டித்து கொலை செய்து, அந்த வாலிபரின் தலையை குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியில் வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, இந்த காசிமேஜர்புரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற, திருமண நிகழ்வில் ஒரு வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், அந்த படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த கொலையானது நிகழ்ந்திருக்க கூடும் எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தென்காசி மற்றும் குற்றாலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருந்தபோதும் தென்காசி நகரப் பகுதியின் அருகே பட்ட பகலில் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த வாலிபர் ஒருவரின், தலை துண்டிக்கப்பட்டு அந்த தலையானது, சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை எடுத்துச் செல்லப்பட்டு கோவில் அருகே வைக்கப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்