மனைவியையும், தந்தையையும் சுட்டுக்கொலை செய்த நபர்! "குழந்தைக்கு அப்பா யார்?" - மனைவியும் மாமனாரும் 'தகாத உறவில்' இருந்ததை பார்த்த கணவர்

அவர்களை ஒரு பார்க்கக்கூடாத கோலத்தில் கணவர் மோமினிடம் கையும் களவுமாகப் சிக்கியதாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
Bulandshahr double murder
Bulandshahr double murderBulandshahr double murder
Published on
Updated on
1 min read

புலந்தஷாரில், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே கள்ள உறவு இருந்ததாகச் சந்தேகித்த 28 வயது இளைஞர், அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கலந்தர்கர்கி கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலிகரில் மருந்துக் கடை நடத்தி வரும் மோமின் கான், சொத்து வியாபாரியான தனது தந்தை முகமது ரியாசுதீன் (50) மற்றும் மனைவி சனா (24) ஆகியோரை, தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ரியாசுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தம்பதியினர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சனா கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அக்குழந்தையின் தந்தை யார்? என்பதில் கணவரான மோமினுக்கு சந்தேகம் இருந்தது.

"மோமின் தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே கள்ள உறவு இருப்பதாக நீண்ட காலமாக சந்தேகித்து வந்துள்ளார். இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன. ஞாயிற்றுக்கிழமை, இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, சனாவின் குடும்பத்தினர் தலையிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சனாவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே மோமின் துப்பாக்கியால் இருவரையும் சுட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோமின் கைது செய்யப்பட்டதாகவும், பிஎன்எஸ் சட்டத்தின் 103-வது பிரிவின் (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மோமின் தனது மொபைல் ஃபோனில் ஆபாசமான உரையாடல்களையும், அவரது மனைவி மற்றும் தந்தையின் புகைப்படங்களையும் கண்டெடுத்ததாக செய்திநிறுவனத்திடம் கூறியுள்ளார்.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர், கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தனக்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகத் தெரிந்திருந்ததாகவும், முன்னதாக அவர்களை ஒரு பார்க்கக்கூடாத கோலத்தில் கணவர் மோமினிடம் கையும் களவுமாகப் சிக்கியதாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். அவர் இருவரையும் பலமுறை எச்சரித்ததாகவும், ஆனால் அந்த உறவு தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சனாவின் குடும்பத்தினரும் அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது,” என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com