“எனக்கு 2-வது பொண்டாட்டியா இரு” - குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய அப்பாவின் நண்பர்! ஆபாச மெசேஜ்களால் சிக்கிய நபர்

ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் அப்பெண்ணைத் தனது இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்வதாக அருவறுக்கத்தக்க வகையில்...
Man Threatens Woman With Bathing Video
Published on
Updated on
2 min read

கான்பூர், சாமன்கஞ்ச் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் ஒருவர் தனது மறைந்த தந்தையின் நண்பர், தான் குளிப்பதை வீடியோ எடுத்து, தகாத வகையில் பேசி தன்னை மிரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணை தன்னை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியாக இருக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, தந்தையின் நண்பரான தௌஃபிக் என்று அறியப்பட்ட ஷானு என்பவர் தான் இந்த குற்றசெயலில் ஈடுபட்டுள்ளார். இவரும் அந்த பெண்ணின் தந்தையும் வியாபார ரீதியாக பழகியதால் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் நட்பின் காரணமாக, ஷானு அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்த பெண்ணும் அவளுடைய சகோதரர்களும் அவரை 'மாமா' என்று அழைத்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவருடைய தந்தை இறந்துள்ளார். இருப்பினும் ஷானு அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, அந்த பெண் குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் அவளது கைபேசிக்கு அந்த விடீயோவை அனுப்பி மிரட்டியுள்ளார். அதன் பின் ஷானு அவரை தொலைபேசியில் அழைத்து, அந்த வீடியோவை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவதாகவும், அப்படி செய்ய கூடாது என்றால் அதற்கு ஈடாக 5 லட்சம் பணம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.

“தன்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் இல்லை” என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததையடுத்து, தொடர்ந்து வற்புறுத்தியும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். செய்வதறியாமல் பணம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார். அதை வெளிப்படுத்தும் விதமாக  வீட்டின் வெளியே ஒரு காகிதத்தில் 'சரி' என்றும் எழுதியுள்ளார். பின்னர்  அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியையும் 15,000 ரூபாயையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனாலும் அந்த விடீயோவை டெலீட் செய்யாமல் மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு அந்த வீடியோவை அனுப்பி மிரட்டலை தொடர்ந்துள்ளார். அதற்கு அந்த பெண் என்ன தான் வேண்டும் உங்களுக்கு என்று கேட்டபோது, “நான் உன்னை காதலிக்கிறேன்” என்றும் தனக்கு முத்தமிடுமாறும் கேட்டுள்ளார். மேலும், உன்னை திருமணம் செய்து கொண்டு, எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த  நிலையில் அப்பெண்ணைத் தனது இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்வதாக அருவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அவருக்கு ஒரு  வீடு கூட வாங்கித் தருவதாகவும் கூறியதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து துன்புறுத்தி வந்த நிலையில் அந்த பெண், நடந்த சம்பவம் முழுவதையும் தனது சகோதரரிடம் தெரிவித்து அழுதுள்ளார். ஆத்திரமடைந்த அந்தச் சகோதரர்கள் அவரை அழைத்து தனியாக பேச வேண்டும் என்று ஒரு இடத்திற்கு வர சொல்லி உள்ளனர். அங்கு வந்தவரை இருவரும் கையும் களவுமாக பிடித்து தாக்கி, பின்னர் காவல்துறையில் ஓப்படைத்துள்ளனர். ஆனால் அப்போது சாமன்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் சமரசம் பேசி அவரை விடுவித்துள்ளனர். சமரசத்திற்குப் பிறகும் ஷானு அந்த பெண்ணை தொடர்பு கொண்டு மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் தனது வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் பல ஆடியோ பதிவுகளையும் அப்பெண் காவல் ஆணையரிடம் சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சாமன்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இந்த விசாரணை உதவி ஆணையர் சிசாமாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சமரசத்திற்கு இடைத்தரகராகச் செயல்பட்டதாக கூறப்படும் காவல் அதிகாரிகள் குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com