மாணவனுடன் காரில் உடலுறவு கொண்ட ஆசிரியர்! நிர்வாண புகைப்படம் அனுப்பி அத்துமீறல்.. பைபோலார் கோளாறுதான் இதற்கு காரணமா?

பிரெய்லி தனது வகுப்பறையில் 16 வயது மாணவனிடம் அத்துமீறி நடந்துள்ளார். அந்த சம்பவம் குறித்து அந்த மாணவர், அந்த அனுபவம் தன்னை இன்றும் மிகுந்த அவமானத்தில் ஆழ்த்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Australian teacher jailed
Australian teacher jailed
Published on: 
Updated on: 
1 min read

ஆஸ்திரேலியாவில், இரண்டு பதின்ம வயது மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக, திருமணமான ஆசிரியை ஒருவருக்கு கடந்த புதன்கிழமை அன்று ஓராண்டுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே அந்த ஆசிரியர் தனது வேலையையும் கணவரையும் இந்த காரணத்தால் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 32 வயதான டெய்லா லீ பிரெய்லி (ஆசிரியர்), கடந்த புதன்கிழமை சிட்னியில் நடந்த தண்டனை அறிவிப்பின்போது தனது பெற்றோரையும், தனது ஆதரவாளர்களையும் கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.

பிரெய்லி, தனது காரில் 17 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டதற்காகவும், அந்த சந்திப்புக்குப் பிறகு மீண்டும் தனது வகுப்புகளுக்குத் திரும்பியதற்காகவும், ஆகஸ்ட் 2024-ல் முதன்முதலில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, பிரெய்லி தனது வகுப்பறையில் 16 வயது மாணவனிடம் அத்துமீறி நடந்துள்ளார். அந்த சம்பவம் குறித்து அந்த மாணவர், அந்த அனுபவம் தன்னை இன்றும் மிகுந்த அவமானத்தில் ஆழ்த்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரெய்லி அந்த 16 வயது மாணவரை இணையம் வழியாகத் தன்வசப்படுத்தியுள்ளார். மேலும், அவர் குளிக்கும்போது எடுத்த நிர்வாணப் புகைப்படத்தை மாணவனுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அதற்குப் பதிலாக ஒரு நிர்வாணப் படத்தை அனுப்பும்படி பிரெய்லி அந்த மாணவனை கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், பிரெய்லி “பள்ளி முடிந்ததும் என்னுடன் இரு,” என்று அந்த மாணவனுக்கு ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.

இந்த விவாகரத்திற்கு பின்னர், அந்த 16 வயது மாணவர் தூக்கமின்மையாலும், கடந்த கால நினைவுகள் மீண்டும் மீண்டும் வருவதாலும் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், உயர்நிலைப் பள்ளியில் இருந்த அவருடைய நண்பர்கள் யாரும் இப்போது அவரிடம் பேசுவதில்லை என்றும் மனவேதனையோடு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிரெய்லிக்கு 'பைபோலார் கோளாறு' இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அது அவரது பகுத்தறியும் திறனைக் குறைத்து, பாலியல் நாட்டத்தை அதிகரித்ததால், 'சிறுவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும்' என்ற 'தவிர்க்க முடியாத உந்துதல்' அவரிடம் இருந்ததாகவும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தனது ஆசிரியர் என்ற பதவியை பயன்படுத்தி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

பின்னர், 17 வயது மாணவருடன் பாலியல் உறவு கொண்டதற்காக பிரெய்லிக்கு ஒன்பது மாதங்களும், 16 வயது சிறுவனைப் பாலியல் ரீதியாகத் தொட்டதற்காக ஓராண்டும் என, மொத்தமாக 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவள் 15 ஆண்டுகளுக்குக் குழந்தைகள் பாதுகாப்புப் பதிவேட்டிலும் சேர்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com