தனது வகுப்பறையில் 18 வயது நிரம்பாத மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார் ஆசிரியர். அந்த மாணவனுக்கு 18 வயது ஆனதும் அவனுக்காகத் தன் கணவரை விட்டுப் பிரிந்து விடுவதாக அவனிடம் கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
37 வயதான ஹெதர் மாஷ்பர்ன்-ஸ்மித், பதின்மவயது மாணவனுடன் உடலுறவு கொண்டது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த 17 வயது மாணவன் ஹெதரை 'அழகாக இருக்கிறாய்' என்று கூறிய பிறகு, ஹெதர் அந்த பதின்மவயது மாணவனுடன் ஸ்னாப்சாட் வழியாகத் தொடர்ந்து உரையாடத் தொடங்கியுள்ளார். அதன்பிறகு அந்தப் பதின்வயது மாணவன், ஹெதரின் வகுப்பறைக்கு மாணவனாக வந்ததாக கூறப்படுகிறது. அங்கு, முதல் முறை சாதித்துக்கொண்ட இருவரும் வகுப்பறையிலேயே முத்தமிட்டுக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இவர்கள் இருவரும் இரண்டு முறை உடலுறவு கொண்டதாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முறையற்ற சந்திப்புகளின்போது, ஹெதர் அந்த மாணவனிடம், அவன் சட்டப்பூர்வ வயதான 18 வயதை அடைந்ததும் ஹெதர் தன் கணவரை, விட்டுப் பிரிந்து அந்த மாணவனுடன் சேர்ந்து வாழப்போவதாக கூறியுள்ளார். இதனால் அந்தச் சிறுவன் கவலையடைந்து, ஹெதருடன் உரையாடுவதை நிறுத்திவிட்டு, அவரை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார். ஆனாலும், அந்த மாணவனை விடாமல் ஹெதர் தொடர்ந்து ஸ்னாப்சாட்டில் செய்தி அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஹெதர், தான் "ஒரு தவறு செய்துவிட்டேன்" என்று கூறி, தாமாகவே முன்வந்து இதுகுறித்துகாவல்துறையிடம் ஒப்புக்கொண்டதாக ஆவணங்கள் மேலும் தெரிவித்தன. அதன்பிறகு, அந்த மாணவர் தன்னை விரும்பப்பட்டவராக உணர வைத்ததாக ஹெதர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த ஆசிரியர் மீது, சிறார்களுடன் சட்டவிரோத பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புளோரிடா சட்டத்தின்படி, இதற்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஹெதர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. அமெரிக்காவில் திருமணமான ஆசிரியை ஒருவர், வயதுக்கு வராத மாணவருடன் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பல சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.