இறந்த உடலுடன் உடலுறவு கொண்ட காதலன்! கொலை செய்ய ஆசைப்பட்ட காதலி - துண்டு துண்டாக வெட்டப்பட்ட கவர்ச்சி நடன பெண்

ஜனவரி 2024-ல் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரியபோதிலும், அவருக்குப் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Morgan Bauer murder case
Morgan Bauer murder case
Published on: 
Updated on: 
2 min read

ஒரு தம்பதியினர் நடனமாடும் ஒரு பெண்ணை கொலை செய்து அந்த பெண்ணின் இறந்த உடலோடு உறவு கொண்டு, அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கேட்லின் கோபிள் மற்றும் அவளது காதலன் ஜொனாதன் 'அலெக்சாண்டர்' வாரன் என்ற தம்பதியினருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோர்கன் பாயர் 2016 பிப்ரவரி 12 அன்று அட்லாண்டாவிற்கு வந்தடைந்துள்ளார். தெற்கு டகோட்டாவைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு அப்போது வெறும் 19 வயதுதான். அவருக்கு நண்பர்களோ, வேலை வாய்ப்புகளோ எதுவுமே அந்த சமயத்தில் இல்லை. ஆரம்பத்தில் தங்குவதற்கு இடம் தேட அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் ஒரு அறையையும், கவர்ச்சி நடனக் கலைஞராக ஒரு வேலையையும் அவர் பெற்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மோர்கன் ஜார்ஜியாவிற்கு வந்து இரண்டு வாரங்கள்கூட ஆகாத நிலையில், காணாமல் போகியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் மோர்கனை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், ஜூலை 2023-ல் ஜார்ஜியா புலனாய்வுப் பணியகத்தின் முகவர்கள் கண்டுபிடித்த சில ஆதாரங்கள் இந்த வழக்கில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது, ​​மோர்கன் காணாமல் போய் 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அவர் அட்லாண்டாவிற்கு வந்தவுடன் நட்பு கொண்ட ஒரு இளம் பெண்தான், மோர்கனை கொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மோர்கனை காணவில்லை என அவரது தாயார் புகார் அளித்ததை அடுத்து, 2016 மார்ச் 15 அன்று கெய்ன்ஸ்வில் காவல் துறை அவரது மறைவு குறித்து விசாரணையைத் தொடங்கியது. மோர்கன் கவர்ச்சி நடனக்கலைஞராக பணியாற்றிய அந்த இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மோர்கன் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட அதே நாளில், அவரது தாயும் ஒரு உள்ளூர் தனியார் புலனாய்வாளரும், பிப்ரவரி 25 அன்று பாயருடன் காணப்பட்ட ஒரு தம்பதியினரைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. கேட்லின் கோபிள் ஆரம்பத்தில், தாங்கள் இருவரும் ஒரு உள்ளூர் ஸ்ட்ரிப் கிளப்பில் ஒன்றாகப் பணிபுரிந்தபோது சந்தித்ததாகவும், மோர்கன் காணாமல் போன அன்று இரவு, கோபிள் மற்றும் அவரது காதலனான வாரனும் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளனர்.

அதன் பின்னர், மோர்கனை ஒரு நபர் காரில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு அவரை மீண்டும் பார்க்கவில்லை என்றும் கோபிள் தெரிவித்துள்ளார். ஆனால், மார்ச் 18 அன்று மோர்கனின் தாய் அந்தக் கிளப்பிற்குச் சென்றுள்ளார். அங்கு, பிப்ரவரி 25-ம் தேதி இரவு மோர்கன், கோபிளுடன் வெளியேறியதாகப் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கோபிள் பற்றியும் அவரது காதலன் பற்றியும் பலவாறாக கருத்துக்கள் மோர்கனின் தாய் தொடர்ந்து கேள்விப்பட்டதாலும், மோர்கனின் உடல் கிடைக்காததாலும், அவர் வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற தகவலினாலும் நாளடைவில் இந்த வழக்கு மெதுவாக செல்ல தொடங்கியது.

இந்நிலையில், கோபிள் மற்றும் அவரது காதலன் வாரன் இருவருமே பிரிந்துள்ளனர். அதனை தொடர்ந்து 2023-ல் காவல்துறையினரால் மோர்கனின் எழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாரன் அதே ஆண்டில் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி 2024-ல் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரியபோதிலும், அவருக்குப் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மோர்கனை கொலை செய்வது என்பது கோபிளுடையது என்று அவரது காதலன் அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தொடர்கொலையாளிகளின்பால் ஈர்க்கபட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், கோபிளுக்கு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ய ஆசை இருந்ததாகவும், அவர்கள் இருவரும் மோர்கனை கொலை செய்ததாகவும் வாரன் தெரிவித்துள்ளார். பின்னர், இறந்த மோர்கனின் உடலுடன் வாரன் உடலுறவு கொண்டதுடன், மோர்கனின் உடலில் சில பாகங்களை அவர்கள் உட்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com