சொந்த மகனை கட்டாயப்படுத்தி 'உறவில் இருந்த தாய்!' 10 வயதில் இருந்து தொடங்கிய பாலியல் கொடூரம் - "தம்பிக்கு தந்தையாகிய அண்ணன்!"

சொந்தத் தாயாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர்தான் அவரின் இளைய சகோதரனுக்கு தந்தை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
mother abuse case
mother abuse casemother abuse case
Published on
Updated on
1 min read

பல ஆண்டுகளாகத் தன் சொந்தத் தாயாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர்தான் அவரின் இளைய சகோதரனுக்கு தந்தை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர், தான் 16வது வயதாக இருந்தபோது, ​​2015-ம் ஆண்டில் தனது தாய் டோரீன் கிஃபோர்டால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் பாலியல் துன்புறுத்தல் பல ஆண்டுகளுக்கு முன்பே அதாவது, தனக்கு 10 வயது இருக்கும்போதே தொடங்கிவிட்டதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

டோரீன் பல ஆண்டுகளாகத் தான் நிரபராதி எனக் கூறி வந்த நிலையில், அவரது மகன் இந்தக் குற்றச்சாட்டுகளுடன் முன்வந்த அதே ஆண்டில், 14 வயதுக்குட்பட்ட குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்டது ஆகிய குற்றசாட்டுகளை முன்வைத்தார். மேலும், டோரினை குற்றவாளி என நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றமும் கூறியுள்ளது.

டோரினுக்கு 8 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, பின்னர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளியாகவே நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. சட்டப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, டோரீன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். டோரின் தன் இளைய குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே, அதன் தந்தை யார்? என்பது குறித்த யூகங்கள் உடனடியாகப் பரவத் தொடங்கின.

இந்த வதந்திகளின் காரணமாக, டோரினின் கணவர் அந்த குழந்தையின் உயிரியல் தந்தை யார்? என்பதைக் கண்டறிய நெவாடா நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவைத் தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளில் டோரினின் மூத்த மகன் மற்றும் அவரது கணவரின் டிஎன்ஏ இரண்டும் புதிதாக பிறந்த குழந்தையின் டிஎன்ஏ-வில் 99.9% பொருந்தியிருந்தது தெரியவந்தது இதனையடுத்து, இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி டோரினின் மூத்த மகனே சட்டப்பூர்வ தந்தை என்று தீர்ப்பளித்தார். அதே நேரத்தில், டிஎன்ஏ பரிசோதனை ஒரு திட்டவட்டமான முடிவை அளிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

மேலும், இது குறித்து பேசிய டோரினின் மூத்த மகன், "தன் தம்பி தன் சொந்த மகனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தொடங்கியதாகவும் அவர் வெளிப்படுத்தினார். "பல குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் ஒரு சிகிச்சையாளர் எங்களிடம் நீண்ட காலமாக இருந்தார், மேலும் இந்தக் குழப்பங்கள் அனைத்தும் அவருக்கு நன்கு பரிச்சயமானவை," என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com