

உத்திர பிரதேச மாநிலம், ஹைதராஸ் மாவட்டம் சிக்கந்தர் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதுடைய பிங்கி சர்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை இருந்தது. பிங்கி சர்மாவிற்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நாளடைவில் இந்த பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி தொடர்ந்து பழகி வந்திருக்கின்றனர்.
சிறுமி பள்ளிக்கு சென்று விடும் நிலையில் வீட்டில் கணவர் மற்றும் மாமியார் இருவரும் இல்லாத போது பிங்கி சர்மா தனது கள்ளக்காதலனான 17 வயதுடைய சிறுவனை அழைத்து அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவா மற்றும் அவரது தாய் உறவினர்களின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வழக்கம் போல பிங்கி சர்மா தனது காதலனை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி இதனை பார்த்துவிட்டு தனது தந்தையிடம் தெரிவித்து விடுவதாக கூறியுள்ளார்.
இதனால் எங்கு தனது தகாத உறவு கணவர் மற்றும் மாமியாருக்கு தெரிந்து விடுமோ என பயந்த பிங்கி சர்மா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து குழந்தையின் சடலத்தை மூட்டையில் கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த சிவா சரியாக 9.30 மணியளவில் சிறுமியை காணவில்லை என தேடி நிலையில் போலீசில் புகாரளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு துறையினரை அழைத்து அருகில் இருந்த கிணற்றில் தேடி பார்த்து போது அதிலிருந்து மூட்டையை எடுத்து பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கழுத்தில் துணியிருக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சிறுமியின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காதலனுடன் சேர்ந்து தாயே சிறுமியை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிங்கி சர்மா மற்றும் அவரது காதலனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.