“பல பெண்களுடன் தகாத உறவில் இருந்த மாப்பிள்ளை” - நள்ளிரவில் ரயில்வே பாலத்தில் நடந்த கொடூரம்… நண்பனுடன் சேர்ந்து மாமனார் செய்த செயல்!

எனவே இருவரும் குடும்பத்தை எதிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம்...
“பல பெண்களுடன் தகாத உறவில் இருந்த மாப்பிள்ளை” - நள்ளிரவில் ரயில்வே பாலத்தில் நடந்த கொடூரம்… நண்பனுடன் சேர்ந்து மாமனார் செய்த செயல்!
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் புதுமனை கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதுடைய ராகவன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய சுவேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எனவே இருவரும் குடும்பத்தை எதிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தனர். சுவேதா கேவி குப்பம் அடுத்துள்ள பிகே புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தினமும் இரவு வேலையை முடித்து வீட்டிற்கு வரும் கவிதாவை ராகவன் பேருந்து நிலையித்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல கடந்த (பிப் 8) ஆம் தேதி அன்று மனைவியை அழைக்க வந்த ராகவன் நள்ளிரவு பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் தலை நசுங்கிய படி வெட்டுக் காயத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து எஸ் பி சிவராமன் மற்றும் கே.வி.குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க எஸ்பி உத்தரவிட்டார். அதன் படி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் மோப்ப நாய் சாராவை வரவழைத்து துப்பு துலக்கினர். அப்போது மோப்பநாய் சடலம் கிடந்த பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அர்ஜூனாபுரம் கூட்ரோடு வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

Admin

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஏற்கனவே 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வந்த நிலையில், கொலையான ராகவனின் சகோதரர் சுரேஷ் அவரது மாமனார் மீது சந்தேகம் உள்ளது என கூறிய அடிப்படையில் கொலையான ராகவனின் மனைவி சுவேதா, அவரது தந்தை அமுல்ராஜ், ஆகியோருக்கு சம்மன்‌ அனுப்பி விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலையான வேலை இல்லாத ராகவன் மது பழக்கத்திற்கு அடிமையாகி அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று சுவேதாவை அடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். எனவே இது தொடர்பாக அமுல்ராஜ் பலமுறை ராகவனை அழைத்து பேசிய நிலையிலும் ராகவன் திருந்தவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அமுல்ராஜ் தனது குடும்ப நண்பரான பைனான்ஸ் தொழில் செய்து வரும் வெட்டுவானம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(29) என்பவரை வைத்து ராகவனை கொலை செய்ய முடிவு செய்து கட்டையால் அடித்து அரிவாளால் வெட்டிய ராகவனை கொலை செய்திருக்கின்றனர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அமல்ராஜ் குற்றத்தை ஒப்புகொண்டதால் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த கொலையில் மேலும் தொடர்புடையவர்கள் யாரேனும் உள்ளார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com