“என் பொண்டாட்டி குழந்தைகளை விட.. நீ தான் முக்கியம்” - கள்ளகாதலியுடன் குடும்பம் நடத்திய வாலிபர்… மகன்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை!

பிரவீன் தன் திருமணத்தை பற்றி கூறி ஸ்ரவந்தியை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது...
sravanthi and sons
sravanthi and sons
Published on
Updated on
1 min read

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரவந்தி இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 12 வயதில் கார்த்திக் மற்றும் 10 வயதில் கௌசிக் என்ற இரண்டு மகன்கள் இருந்த நிலையில் பிரவீன் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இதற்கிடையில் உறவினர் வீட்டின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற பிரவீனுக்கு மகேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. அப்போது பிரவீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருப்பதை அறிந்த மகேஸ்வரி பிரவீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரவீன் மகேஸ்வரியிடம் “என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம்” என கூறி மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

தொடர்ந்து அவ்வப்போது வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு பிரவீன் மகேஸ்வரியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சந்தேகமடைந்த ஸ்ரவந்தி தனது கணவரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.அப்போது ஆத்திரமடைந்த பிரவீன் தன் திருமணத்தை பற்றி கூறி ஸ்ரவந்தியை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த ஸ்ரவந்தி தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

பின்னர் உறவினர்கள் ஸ்ரவந்தி மற்றும் பிரவீனை சமாதானம் செய்து வைத்த நிலையில் பிரவீன் ஸ்ரவந்தி மற்றும் தனது மகன்களுடன் ஹைதராபாத், குகட்பள்ளி பகுதிக்கு சென்று வசித்து வந்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து மகேஸ்வரியுடன் பழகி வந்ததாக சொல்லப்படும் நிலையில் இதனால் மன உளைச்சல் அடைந்த ஸ்ரவந்தி நேற்று முன்தினம் தனது குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரவந்தியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரவீனின் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com