பிரஷர் குக்கரில் உடல் பாகங்கள், வாளி வாளியாக இரத்தமும் சதையும் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பையின் மீரா ரோடு அருகே உள்ள தனது வாடகைக் குடியிருப்பில் , உடன் வாழ்ந்து வந்த நபரால் 32 வயதான சரஸ்வதி வைத்யா கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானே (56), புதன்கிழமை அன்று அவரது குடியிருப்பில் இருந்து கைது செய்யப்பட்டு, தானே நீதிமன்றத்தால் ஜூன் 16 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தன்னுடன் வாழ்ந்து வந்த தனது காதலியின் உடலை, மனோஜ் 20 துண்டுகளாக வெட்டி, அவற்றை வெவ்வேறு முறைகளில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
புதன்கிழமை (மே 3), அன்று அண்டை வீட்டுக்காரர் ஒருவர், மனோஜ் வீட்டில் இருந்து வந்த தாங்க முடியாத துர்நாற்றம் வந்துள்ளது. குறித்து விசாரிக்க மனோஜ் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். ஆரம்பத்தில் உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து மனோஜ் கதவைத் திறந்துள்ளார். கதவினை திறக்கும் அந்த இடைவெளியில், துர்நாற்றத்தை அடக்குவதற்காக அவர் வீட்டில் ரூம் ஃப்ரெஷ்னரைத் தெளித்துள்ளார். நான் அந்தத் தெளிப்பின் சத்தத்தைக் கேட்டேன்," என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் ஒரு கருப்பு சாக்குடன் வெளியே வந்து, இரவு 10.30 மணிக்குள் திரும்பி வந்துவிடுவதாக அண்டை வீட்டுக்காரரிடம் கூறியுள்ளார். இருப்பினும், ஏதோ சரியில்லை எனச் சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையை அழைத்துள்ளனர்.
நயா நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து, கதவை உடைத்துத் திறந்தபோது, ஒரு பெண்ணின் அழுகிய உடல் பாகங்களைக் கண்டுள்ளனர். மேலும், மனோஜ் சானே தனது காதலியின் உடலைத் துண்டாக்கப் பயன்படுத்திய மரம் வெட்டும் கத்தியையும் வரவேற்பறையில் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
அந்த ஃபிளாட்டின் சமையலறையில், துண்டாக்கப்பட்ட உடல் பாகங்களும் இரத்தமும் இருந்த மூன்று வாளிகளையும் கண்டெடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மனோஜ் அவரது காதலியின் உடல் பாகங்களை பிரஷர் குக்கரில் வேகவைத்து, சில பாகங்களை வாளிகளில் மறைத்து வைத்துள்ளார். மேலும், அந்த ஃபிளாட்டின் படுக்கையறையில், உடல் பாகங்களை அப்புறப்படுத்த அவர் பயன்படுத்திய கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளும் கண்டெடுக்கப்பட்டன.
துர்நாற்றத்தை மறைப்பதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர் பயன்படுத்திய பல ஏர் ஃப்ரெஷ்னர் கேன்களும், அந்த ஃபிளாட்டின் வெவ்வேறு அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் தலைமுடி படுக்கையறையில் தனியாக வைக்கப்பட்டிருந்ததை காவல்துறை கண்டறிந்தது. மனோஜ் சானே தனது குடியிருப்புக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளங்களுக்கு அருகே இருக்கும் ஒரு வடிகாலில் தன்னுடன் வாழ்ந்து வந்த துணையின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை வீசியிருக்கலாம் என காவல்துறையினரும் அவரது அண்டை வீட்டாரும் சந்தேகிப்பதாக கூறுகின்றனர்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணின் உடல் பாகங்களைத் தெரு நாய்களுக்கு உணவாகக் கொடுத்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து மனோஜிடன் கேட்டபோது, சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த பிறகு அவரது உடலை அப்புறப்படுத்தியதாகவும் மனோஜ் சானே காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். உடல் பாகங்களின் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று துணை ஆணையர் ஜெயந்த் பஜ்பாலே தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு போரிவலி பகுதியில் உள்ள மனோஜ் சானேவின் ரேஷன் கடைக்கு சரஸ்வதி வைத்யா சென்றபோது, அவரும் சானேவும் முதன் முதலில் சந்தித்துள்ளனர். இருவரும் காதலில் விழுந்து, அதே ஆண்டில் ஒன்றாகக் குடியேற முடிவு செய்துள்ளனர். சில ஆண்டுகள் போரிவலியில் வசித்த பிறகு, 2017-ம் ஆண்டு மீரா ரோடுக்குக் குடிபெயர்ந்த அவர்கள், சானே சரஸ்வதியைக் கொலை செய்வதற்கு முன்பு, மீரா ரோட்டில் உள்ள கீதா நகர் 7-ஆம் கட்டத்தில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்துள்ளனர்.
ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக தம்பதியினருக்குள் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, அப்பெண்ணை அவரது காதலன் கொலை செய்ததாக ஜெயந்த் பாஜ்பாலே தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்