உல்லாசமாக இருக்க சென்ற கள்ளக்காதலி.. வாட்சப் Chat சந்தேகத்தால் நடந்த கொலை! வெவ்வேறு இடங்களில் வெட்டி வீசப்பட்ட உடல் பாகங்கள்!

வாட்ஸ்அப் உரையாடல்களை சரிபார்க்க கேட்டதாகவும், ஆனால் ரேஷ்மா மறுத்துவிட்டதாகவும்
gujarat murder
Published on
Updated on
2 min read

மொபைல் சாட் சந்தேகத்தால், திருமணமான 38 வயது பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உத்தரப் பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் குஜராத்தைச் சேர்ந்த ஹேமல் கக்காரியா என்ற திலீப் (42). இவர் மதியாஹு பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வாடகை வீடு  எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, சமூக ஊடகம் மூலம் வாரணாசியை சேர்ந்த 38 வயது ரேஷ்மா கான் என்ற பெண் ஒருவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளது. காரியாவின் பரிந்துரையின் பேரில் ஒரு தனியார் நிறுவனத்தில் ரேஷ்மாவிக்கு வேலை வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர், ஒரு கட்டத்திற்கு மேல் இந்த உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் ரேஷ்மா தனது குடும்பத்தினரை தவிர்த்து, பெரும்பாலான நேரத்தை கள்ளக்காதலனோடு செலவிடத் தொடங்கியுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, கொலை செய்யப்பட்ட ரேஷ்மா கான் ஜூலை 4 அன்று ககாரியாவுடன் தனிமையில் இருப்பதற்கு அவரது வாடகை வீட்டிற்குச் சென்ரறுள்ளார்.

அங்கு தங்கியிருந்தபோது, ​​அப்பெண்ணின் கைபேசி தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ககாரியா அப்பெண்ணின் வாட்ஸ்அப் உரையாடல்களை சரிபார்க்க கேட்டதாகவும், ஆனால் ரேஷ்மா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் வன்முறையாக முற்றி, ​​அவர் அப்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. கொலைக்குப் பிறகு, உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல், யாருக்கும் சந்தேகம் வராத நோக்கில் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளார். கக்காரியா சந்தையில் இருந்து வாங்கி வந்த கருப்பு நிற பிளாஸ்டிக் பைகள் மற்றும்  கசாப்புக் கத்தியைப் பயன்படுத்தி ரேஷ்மாவின் கைகளையும் கால்களையும் துண்டித்து, பின்னர் உடலை மூன்று பகுதிகளாக துண்டித்து தனித்தனி பைகளில் அடைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத வெவ்வேறு இடங்களில் வீசியதாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை மதியாஹு காவல் நிலையப் பகுதியிலுள்ள ராணிபூர் புறவழிச்சாலை அருகே புதர்களில் இருந்து பெண்ணின் சிதைக்கப்பட்ட உடல் பகுதி கிடப்பதாக, அப்பகுதி மக்கள் சிலர் கண்டறிந்து தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல் பாகங்களை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். காவல் நிலைய அதிகாரி தலைமையிலான குழு, கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காணவும் குற்றவாளிகளை கண்டறியவும் விசாரணையைத் தொடங்கியது. கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராம்நகர் வட்டார நுழைவாயில் அருகே ககாரியாவை காவல்துறையினர் வழிமறித்தனர். தப்பிச் செல்ல முயன்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த அவர், நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை தகவல்படி, உடற்பகுதி ராணிபூர் புறவழிச்சாலைக்கு அருகே வீசப்பட்டிருந்தது, அதே சமயம் கால்களும் மற்ற உடல் பாகங்களும் ராம்நகர் வட்டாரத் திருப்பத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறு பாலத்தின் அருகே வீசப்பட்டிருந்தன. மீதமுள்ள உடல் பாகங்களை அப்புறப்படுத்த முயன்றபோது குற்றம் சாட்டப்பட்டவர் இடைமறிக்கப்பட்டதாக சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து, 0.32 விட்டமுள்ள நாட்டுத் துப்பாக்கி ஒன்று, இரண்டு தோட்டாக்கள், கொலையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி, எஞ்சிய உடல் பாகங்கள், கைபேசி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com