உதவி ஆய்வாளரின் மூக்கை உடைத்த மர்ம ஆசாமிகள்; போலீஸ் வலைவீச்சு!

உதவி ஆய்வாளரின் மூக்கை உடைத்த மர்ம ஆசாமிகள்; போலீஸ் வலைவீச்சு!
Published on
Updated on
1 min read

தண்டையார்பேட்டையில் காவல் உதவி ஆய்வாளரை ரோந்து பணியின் போது தாக்கிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை ஆர் கே நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இன்று பாலமுருகன் சாதாரண உடையில் தனது 'TN.01.G.6332' இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கே சந்தேகம் படும்படியாக நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்து கொண்டிருந்ததில் ஒரு நபர் கஞ்சா போதையிலும், மற்றவர்கள் குடிபோதையிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் திடீரென உதவி ஆய்வாளர் பாலமுருகனை ஒருமையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. உடனே அந்த நபரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து வைத்துக் கொண்டு அவரை உதவி ஆய்வாளர் கீழே உட்கார வைத்திருந்ததார். பின்பு கீழே உட்கார்ந்து இருந்த நபர் திடீரென எழுந்து உதவி ஆய்வாளர் முகத்தில் சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த  மற்றவர்களும் சேர்ந்து உதவி ஆய்வாளரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்து விட்டு அங்கு இருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து அங்கு சென்ற போலீசார் உதவி ஆய்வாளரை மீட்டு அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் முகம் கை மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர் 

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகனை தாக்கிய மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகிறார்கள். மக்கள் அதிக நெருக்கடியான வைத்தியநாதன் பாலம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com