மர்மமான முறையில் உயிரிழப்பு... தீவிர விசாரணை...!!

மர்மமான முறையில் உயிரிழப்பு... தீவிர விசாரணை...!!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையில் அருகே உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர், நாராயணபாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் பிரபாகர் என்பதும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் பட்டு சேலை விற்பனை இடத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மனைவியை பிரிந்ததால் தனது தாய் தந்தையுடன் நாராயணபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.  வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பவில்லை.  இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் இரத்தகாயங்களுடன் வாலிபர் சடலம் இருப்பதாக பொதுமக்கள் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன பேரில் சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் பேசில்பிரேம்ஆனந்த் சென்று ரத்த காயங்களுடன் இருந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் நாராயணபாளையதெரு பகுதியினை சேர்ந்த பிரபாகர் என்பது தெரியவந்தது.

மேலும் காவல்துறையினர் அவரது வீட்டில் சென்று இத்தகவலைஉறுதிசெய்தனர்.  ரத்தகாயங்களுடன் இருந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறை மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது மோப்பநாய் புதிய ரயில்வே நிலையம் அருகே வரை சென்றுவிட்டது. பிரபாகர் காயங்களுடன் இறந்தது குறித்து காவல்துறை அவரது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com