
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 39 வயதான சக்திவேல். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி 30 வயதான விஜயா ராணி கால்நாடுகளை பார்த்து கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளார். சக்திவேல் விஜயா ராணி தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகே 26 வயதான சதிஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சக்திவேல் லாரி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று மூன்று நான்கு மாதங்கள் பிறகு தான் வருவாராம். அப்போது விஜயா ராணிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கோணங்காடு பகுதியைச் சேர்ந்த பத்தியப்பா விவசாயி தோட்டத்தில் தனிமையில் சந்தித்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளது. இந்நிலையில் கடந்த (ஜூலை 10) வீட்டில் இருந்த கணவரிடம் மருத்துவமனைக்கு செல்வதாக சொல்லிவிட்டு விஜயா ராணி சதீஷை பார்க்க தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு விஜயா ராணியை சந்தித்து பேசிய சதிஷ் தனது மனைவியையும் குடும்பத்தையும் சந்திக்க செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த விஜயா ராணி தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்த விஜயா ராணி பாட்டிலை தனது கையால் உடைத்து “நீ இங்க இருந்து போன நான் இங்கயே தூக்கு மாட்டிட்டு செத்துடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனை நம்பாத சதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சென்றுள்ளார்.
பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்த சதீஷ், விஜயா ராணி வீட்டிற்கு செல்லாமல் இருந்ததை அறிந்துள்ளார். தோட்டத்திற்கு சென்று பார்த்த அங்கு விஜயா ராணி தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரை மீது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல எண்ணிய சதிஷ் ஏற்கனவே உயிரிழந்ததை அறிந்து விஜயா ராணியின் உடலை அங்கேயே போட்டு விட்டு அவரது புடவை மற்றும் செல்போனை எடுத்து கிணற்றில் போட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு செல்வதாக சொன்ன மனைவி வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கணவன் போலீசில் புகாரளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் ஒன்பது நாட்களுக்கு பிறகு விஜயா ராணியின் போன் ரெக்கார்டு வைத்து அவர் சதீஷ் உடன் பழகி வந்ததை கண்டறிந்துள்ளனர். பிறகு சதீஷை பிடித்து விசாரணை நடத்திய போது விஜயா ராணியும் சதீஷும் கடந்த மூன்று வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் விஜயா ராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை போலீசாரிடம் சதீஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சதீஷை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயா ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சதீஷை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.