கர்நாடக மாநிலம், நெலமங்கள அடுத்துள்ள மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய லிகித். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் திருமணத்திற்கு பெண் தேடி வந்திருக்கின்றனர். பின்னர் கடந்த நவம்பர் மாதம் நாகமங்களவை சேர்ந்த 26 வயதுடைய ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இருவரும் திருமணத்திற்கு பிறகு மல்லசந்திராவில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர்.
ஐஸ்வர்யாவும் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் லிகித் மனைவி மீது சந்தேகப்பட்டு தினமும் கேள்வி கேட்டு கொடுமை செய்து வந்திருக்கிறார். வீட்டில் இருந்து அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று வந்தால் கூட “எவன் கூட போயிட்டு வர” என கேட்டு அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் லிகித் செய்யுள் டார்ச்சர் தாங்க முடியாத ஐஸ்வர்யா இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர். பின்னர் மல்லசந்திராவில் உள்ள மகளின் வீட்டிற்கு வந்த பெற்றோர் லிகித் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து விட்டு மாலை மீண்டும் அவர்களது வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். பின்னர் வழக்கம் போல கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பாய்ட்ட பொது லிகித் ஐஸ்வர்யாவை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் விரக்தியடைந்த ஐஸ்வர்யா தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த லிகித் அவரை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே ஐஸ்வர்யா உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து லிகித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.