"உயிரை பறித்த கறிக்குழம்பு".. புது மணப்பெண் நிகழ்த்திய "கொடூரம்"! திருமணமாகி 36 நாளில் மாப்பிளைக்கு நடந்த அநீதி!

மாலை வீடு திரும்பும் போது ரகுநாத்துக்கு பிடித்த கறி குழம்பை சமைத்து மனைவி சுனிதா அவருக்கு
"உயிரை பறித்த கறிக்குழம்பு".. புது மணப்பெண் நிகழ்த்திய "கொடூரம்"! திருமணமாகி 36 நாளில் மாப்பிளைக்கு நடந்த அநீதி!
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தை  சேர்ந்தவர் 25 வயதான ரகுநாத் இவருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சுனிதா என்பவருக்கும் கடந்த (மே 11) தேதி இரு குடும்பத்தாரும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி சில நாட்களிலேயே கணவரை பிடிக்கவில்லை கணவரோடு சேர்ந்து வாழ முடியாது என சுனிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அனைவரும் சேர்ந்து சுனிதாவை ரகுநாத்துடன் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ரகுநாத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்த சுனிதா (ஜூன் 14) தேதி தனது கணவரிடம் தோட்டத்திற்கு பூச்சி மருந்து அடிக்க வேண்டும் என சொல்லி ரகுநாத்தை பூச்சி மருந்து வாங்கி வர கூறியுள்ளார். மனைவி சொன்னது போல பூச்சி மருந்து வாங்கி கொடுத்துள்ளார் ரகுநாத்.

மறுநாள் காலை வழக்கம் போல் எழுந்து வேலைக்கு சென்றுள்ளார் ரகுநாத். மாலை வீடு திரும்பும் போது ரகுநாத்துக்கு பிடித்த கறி குழம்பை சமைத்து மனைவி சுனிதா அவருக்கு பரிமாறியுள்ளார். அதை சாப்பிட்டு விட்டு உறங்க சென்ற ரகுநாத்துக்கு சிறிது நேரத்தில் வயிறு வலிக்க தொடங்கியுள்ளது. வலி தாங்க முடியாமல் துடித்த ராகுவை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரகுநாத் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் ரகுநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.  தகவலறிந்து  மருத்துவமனைக்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற் கட்டமாக ரகுநாத் சாப்பிட உணவில் இருந்த நச்சு பொருளால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

எனவே  உணவு சமைத்த சுனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கறிகுழம்பில் பூச்சு மருந்து கலந்தது தெரிய வந்துள்ளது. எதற்காக கொலை செய்தார் என விசாரித்த போலீசாரிடம் ரகுநாதனின் தாய் சுனிதாவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com