"காதலனோடு சேர்த்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!" மூச்சித் திணறடிக்கப்பட்டு கால்வாயில் வீசிய கள்ளக்காதலன் - இயற்கை மரணம் என முடிக்கப்பட்ட வழக்கு.. ட்விஸ்ட் கொடுத்தது எப்படி?

இரவு மருந்து வாங்குவதற்காக மின்சார ஸ்கூட்டரில் (EV) வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
Haryana murder case
Haryana murder caseHaryana murder case
Published on
Updated on
2 min read

குர்கானில் காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு ரேவாரியில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து சடலமாக 21 வயது இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். தனது மனைவியின் திருமணத்திற்குப் புறம்பான உறவு தொடர்பான சதியின் ஒரு பகுதியாக, அவராலும் அவரது காதலனாலும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கசோலி கிராமத்தைச் சேர்ந்த, இறந்தவரின் மனைவி தன்னுவையும், முண்டன்வாஸைச் சேர்ந்த ஹரியோமையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதேவேளையில், அந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் சோனு மற்றும் அவரது கூட்டாளி அமன் உள்ளிட்ட மற்ற இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஜர்தால் கிராமத்தைச் சேர்ந்த மோனு, ஜூன் 8 ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக மின்சார ஸ்கூட்டரில் (EV) வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் பவால் டிஎஸ்பி சுரேந்திர ஷியோரன் தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை ரத்தன் லால், ஜூன் 9 ஆம் தேதி கசோலா காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை எனப் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறை தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. ஜூன் 10 அன்று, மோனுவின் உடல் அசல்வாஸ் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அதே சமயம் அவரது ஸ்கூட்டர் கால்வாய்க் கரையில் கிடந்தது. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, ​​அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை. இதனால், இது தற்செயலாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என காவல்துறையால் நம்பப்பட்டது. அதன்பின்னர், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், மோனுவின் குடும்பத்தினர் அவரது மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, விசாரணை ஒரு திருப்பத்தை அடைந்தது.

காவல்துறை கொலைக் குற்றச்சாட்டைச் சேர்த்து, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுத் தகவல்களைப் பயன்படுத்தி விரிவான விசாரணையைத் தொடங்கியது. இந்த விவகாரம் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றியதுடன், குடும்ப உறுப்பினர்களும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். புலனாய்வுத் தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன், மோனு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி தன்னு திருமணத்தில் மகிழ்ச்சியற்று இருந்ததோடு, சோனு என்ற இளைஞருடன் அவருக்குப் பழைய காதல் உறவும் இருந்துள்ளது. இதனால், அவரது கணவரை கொலை செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று டிஎஸ்பி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, ஜூன் 8 ஆம் தேதி இரவு தன்னு, மோனுவை கசோலி கிராமத்திற்கு அழைத்துள்ளார். சோனுவால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஹரியோம் மற்றும் அமன் ஆகியோர் ஏற்கனவே அங்கு காத்திருந்துள்ளனர். மோனு கிராமத்தை அடைந்தவுடன், அவர்கள் அவரை பிடித்து, அவரது வாயையும் மூக்கையும் மூடி, கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அவரை கால்வாயில் வீசியுள்ளனர், என்று டிஎஸ்பி தெரிவித்துள்ளார். கால்வாயில் வீசப்பட்ட பிறகு அவர் மூச்சுத்திணறி இறந்தாரா? அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா? என்பதையும், அவர் தண்ணீரில் வீசப்பட்ட நேரத்தில் உயிருடன் இருந்தாரா? என்பதையும் தெளிவுபடுத்தும் தடயவியல் ஆய்வகத்தின் (FSL) அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை மாலை தன்னு மற்றும் ஹரியோம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டறியவும், ஒவ்வொரு சதிகாரரின் பங்கையும் உறுதி செய்யவும் புலனாய்வாளர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் குடும்பத்தினர், அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என காவல் துறையிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது," என்று டிஎஸ்பி கூறினார். மோனு சிறுசிறு வேலைகள் செய்து வந்ததாகவும், சமீபத்தில் ஜாலியாவாஸில் ஒரு கடையைத் தொடங்கியிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு முடித்துவிட்டு உடனடியாக வேளைக்கு சென்றுள்ளார். இவரது மொத குடும்பத்திற்கும் இவர் ஒருவர் மட்டுமே வருமானம் செய்துகொடுக்கும் ஆளாக இருந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தன்னு, தனது காதலன் என்று கூறப்படும் நபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், மோனுவை தங்கள் வழியிலிருந்து அகற்றுவதற்காகவே இந்தக் கொலை திட்டமிடப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். சோனு மற்றும் அமனை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com