

மாணவியின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: சேலம் இளைஞர்கள் இருவர் கைது. தனியார் கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 4ம் ஆண்டு என்ஜினியரிங் பயின்று வரும் மாணவி ஒருவர், அங்கேயே கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த அருணாசலம் தனது இன்ஜினியரிங் படிப்பை பாதியிலையே கைவிட்ட பிறகு, இந்த இளம்பெண்ணுக்கு உதவுவது போன்று நடித்து பழகியும் வந்துள்ளார். மேலும் மாணவி தனக்கு பணம் தேவை படுவதாக கூறி, தனது நகைகளை வைத்து பணம் பெற்று தருமாறு கேட்டுள்ளார். நகைகளை பெற்றுக்கொண்ட அருணாசலம் அந்த நகைகளை 60,000 வைத்து வெறும் 30,000 மட்டுமே அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை தனது பைக் டீவ் கட்டாததால் பைனான்ஸ் மேனேஜர் வாங்கி கொண்டதாகவும், சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டு கொள்ளுமாறும் ஒரு போன் நம்பரை அனுப்பி உள்ளார். அது கட்டிட வேலை செய்து வரும் அருணாசலத்தின் நண்பர் சந்தோஷின் எண், இதே போல் ஏமாற்றி அந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.
அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட இந்த இளம் பெண் சந்தோஷிடமும் போனில் பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரும் அந்த மாணவியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். இருவரும் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தங்களது வலையில் சிக்க வைத்துள்ளனர். மேலும் வீடியோ கால் பேசும் போது “உன்னை ஆடையில்லாமல் பார்க்கவேண்டும்" என கேட்டு, நிர்வாணமாக வரச்சொல்லி உள்ளனர். அவர்களது பேச்சை கேட்டு மாணவியும் செய்துள்ளார். அந்த வீடியோவை பதிவு செய்து, பின்னர் அந்த மாணவியின் அந்தரங்க மற்றும் நிர்வாண வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், தங்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அதனை இணையதளங்களில் வெளியிடப் போவதாகவும் கூறி இரு இளைஞர்களும் அந்த மாணவியை கடுமையாக மிரட்டியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான அந்த மாணவி, விடுதி வார்டனிடம் கூறி அழுதுள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக கோவை கோவில்பாளையம் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார் மாணவி.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படைப் போலீசார், சேலம் விரைந்து மாணவியை மிரட்டிய அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய கோவை கோவில்பாளையம் காவலர்கள், சமூக வலைதளத்தில் தெரியாத நபர்களிடம் நெருங்கி பழகி வேண்டாம் என்றும், அவர்களின் பேச்சை கேட்டு புகைப்படம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். அப்படி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக காவல் துறையை அணுகவும், புகார் அளிக்கவும் அறிவுறுத்தினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.