
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் சின்னமணி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மனைவி மற்றும் மகள் சுவேதா தொட்டது பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். சுவேதா காந்தி நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று 12 வகுப்பு பயின்று வருகிறார்.
வெதிரல் இருந்து பள்ளி தூரம் என்பதால், அரசு பேருந்தில் சுவேதா பள்ளிக்கு சென்று வருவது வழக்கம், அதுபோல தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுவேதா பேருந்தில் பள்ளிக்கு செல்லும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த அருள்குமார் என்ற இளைஞர் சுவேதா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்து பின் தொடர்ந்து தன்னை காதலிக்குக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
பலமுறை அருளிடம் தனக்கு காதலிப்பதில் விருப்பமில்லை என கூறிய சுவேதா, இதை பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சுவேதாவின் உறவினர்கள் அருளை கண்டித்து உள்ளனர். இருப்பினும் தனது ஒரு தலை காதலை கைவிடாத அருள் தொடர்ந்து மனைவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனை அடுத்து சுவேதா தன்னை காதலிக்காததால் ஆத்திரம் அடைந்த அருள் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவியிடம் சென்று தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுத்து அருளை தவிர்க்க சுவேதா அருகில் இருந்த துணிக்கடைக்கு சென்றுள்ள பின் தொடர்ந்து சென்ற அருள் சுவேதாவை சரமாரியாக தாக்கி பேனா கத்தியால் தலையில் வெட்டியுள்ளார்.
இதை பார்த்து அருகில் இருந்த சக மாணவர்கள் கூச்சலிட அங்கிருந்த பொதுமக்கள் சுவேதாவை மீது அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சுவேதா சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதனை அறிந்த காவல் துறையினர் சுவேதாவிடம் வாக்குமூலம் பெற்று அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவேதாவை அருள் பின் தொடர்ந்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.