“அவன் உயிர் போச்சா இல்லையா” - 55 வயது மாமனுக்காக கணவன் கொலை.. கூலிப்படையை ஏவிய 25 வயது மனைவி!

கட்டாயப்படுத்தி பிரியானுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்
priyaan,devi,jivan
priyaan,devi,jivan
Published on
Updated on
1 min read

பீகார் மாநிலம் நவி நகரை சேர்ந்தவர் 33 வயதான பிரியான். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதான தேவி என்பவருடன் கடந்த இரண்டு மதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பிரியான் வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் பிரியானை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த பிரியானை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது போன் மற்றும் அவரது அடையாள அட்டையை கைப்பற்றிய போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக அவரது போனில் உள்ள கால் ஹிஸ்டரியை கைப்பற்றிய போலீசார் அவர் கொல்லப்படுவதற்கு முன்பு பேசிய நபர்களை விசாரித்தனர். அதில் அவரது மனைவி தேவியை விசாரிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். போலீஸ் வருவதை கூட கவனிக்காத தேவி யாரிடமோ “அவன் கதையை முடிச்சிட்டீங்களா உயிர் போயிடுச்சு இல்ல” என பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த போலீசார் தேவியிடம் கட்டி கொள்ளாமல் வழக்கம் போல் விசாரணை நடத்தியுள்ளனர்.

தேவியிடம் உங்கள் கணவர் கொல்லப்பட்டு விட்டார் என கூறியதும், பதறியது போல நடித்து தேவி நடக்கமாட்டியுள்ளார். மேலும் தனது கணவரை கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். பின்னர் போலீசார் தேவியின் போன் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார். இத்தனையும் அவர் பேசியதையும் வைத்து தேவி மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் தேவி தனது சொந்த மாமாவான 55 வயதான ஜீவன் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த தேவியின் பெற்றோர்களை வயதை காரணம் காட்டி தேவியை கட்டாயப்படுத்தி பிரியானுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் தனது மாமாவிடம் தொடர்ந்து பேசிய தேவி அவருடன் சேர்ந்து பிரியானை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார், என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தேவி அவரது மாமா ஜீவன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நால்வரையும் சிறையில் அடைத்துள்ளனர். கல்யாணமான 45 நாட்களில் மனைவி கணவனை கூலிப்படை வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com