பல்லடம் அடுத்த பருவாய் பகுதியில் கல்லூரி மாணவி வித்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்பொழுது புதைக்கப்பட்ட வித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட உள்ளது.
கடந்த 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்ட நிலையில் வித்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாகவும் மேலும் அவரது பெற்றோர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய போது வித்யாவின் மேல் பீரோ கிடந்ததாகவும் 108 ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது வித்யா உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் வருவாய் பகுதியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் வித்யாவும் திருப்பூர் விஜயா புறத்தை சேர்ந்த வாலிபர் வெண்மணியும் காதலித்து வந்ததாகவும் இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வித்யா திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கல்லூரி மாணவி வித்யாவின் மரணம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், தொடர்ந்து போலீசார் கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கிய நிலையில் தற்பொழுது வித்யாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கல்லூரி மாணவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் கருப்பு பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டுள்ளது அதேபோல் கிருமி நாசினி பினாயில் உள்ளிட்டவைகள் அங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும் வித்யாவின் உடல் புதைக்கப்பட்ட மயானத்தின் கதவுகளை போலீசார் அடைத்து வைத்துள்ளனர் மேலும் மருத்துவ குழுவினர் தற்பொழுது வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்