“பங்கு சந்தை முதலீடுகளில் வந்த லாபம்” - கடன் வாங்கி முதலீடு செய்த இல்லத்தரசி.. எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை!

வீட்டு வேலை முடிந்து விட்டு வீட்டில் ஓய்வாக இருக்கும் பொழுது யூடியுப்பில் ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து அடிக்கடி காணொளிகளை பார்த்து வந்துள்ளார்,
pallavaram online investment suicide news in tamil
pallavaram online investment suicide news in tamil
Published on
Updated on
2 min read

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் 44 வயதான அருண். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 38 வயதான வனஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அருண் மற்றும் வனஜா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பொழிச்சலூர் இருக்கும் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.மாற்றுத் திறனாளியான அருண், பெயிண்டிங் டிசைனராக பணிபுரிந்து வந்த நிலையில்,அவரது மனைவி வனஜா இல்லத்தரசியாக இருந்து வந்தார்.

வீட்டு வேலை முடிந்து விட்டு வீட்டில் ஓய்வாக இருக்கும் பொழுது யூடியுப்பில் ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து அடிக்கடி காணொளிகளை பார்த்து வந்துள்ளார்,அதன் மூலம் கணவர் அருண் குடும்ப செலவிற்கு கொடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்து அதை ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் வனஜா, சிறிய அளவு முதலீடு செய்துள்ளார் அப்போது வனஜா முதலீடு செய்த பணம் இரட்டிப்பு மடங்கு பங்கு உயர்ந்து வருமானம் வந்ததாக கூறப்படுகிறது.

அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிட்டும் என எண்ணிய வனஜா, மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்று அந்த பணத்தையும் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யத் தொடங்கினார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டிற்கு தெரியாமல், லோன் ஆப் மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் பெற்று, அந்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். இவ்வாறு கடன் வாங்கி ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்த வனஜாவிற்கு, எந்தவித பணமும் யூடிபில் கூறியது போல் இரட்டிப்பாக வரவில்லை அது மட்டும் இன்றி அவர் முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் இருந்துள்ளது.

எனவே மனமுடைந்த வனஜா, சமீப காலமாக லோன் ஆப்பின் மூலம் வாங்கிய கடனை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார், இந்நிலையில், வங்கி ஊழியர்கள் இவரது வீட்டிற்கு வந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த வனஜா கணவர் மற்றும் மகன்கள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த மகன்கள் வீட்டில் வந்து பார்த்த பொழுது படுக்கை அறை கதவு உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்துள்ளது.

எனவே வனஜாவை அழைத்துள்ளனர். பலமுறை அழைத்தும் வனஜா வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வனஜா மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த வனஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இறந்த வனஜாவின் கைபேசியை போலீசார் ஆய்வு செய்து பார்த்த போது, அதில் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்து வைத்திருந்த மூன்று ஆடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. அதில் ஒரு ஆடியோவில் தான் தனியார் வங்கியில் இரண்டரை இலட்சம் ரூபாய் கடன் வாங்கியதால் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும்,தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் கடன் வாங்கி கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com