"சிறுமிடம் ஆசை வார்த்தை கூறி தினமும் உடலுறவு!" ஆபாச சாட்கள்.. 5000+ குற்றசாட்டுகள் - பல ஆண்டுகள் சித்திரவதை செய்த அந்த நபர் யார்?

அவரை "விரும்புவதாக" கூறி தகாத செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளார்.
child abuse
child abuse
Published on
Updated on
1 min read

பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒருவர், பல ஆண்டுகளாக சிறுமி ஒருவரைபாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிட்டத்தட்ட 4,000 பெரும் குற்றங்கள் உட்பட 5,000-க்கும் மேற்பட்ட குற்றசாட்டுகளை காவல்துறையினர் பதிந்துள்ளனர்.

37 வயதான நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர், பாதிக்கப்பட்ட சிறுமியைத் தன்வசப்படுத்தி, பல ஆண்டுகளாக அந்த சிறுமியுடன் அதாவது, 'கிட்டத்தட்ட தினமும்' உடலுறவு கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் வைத்திருத்தல் முதல் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தல் வரையிலான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு புகாரின்படி, கிளியர்ஃபீல்ட் கவுன்டியைச் சேர்ந்த ஸ்பென்சர், அந்த சிறுமிக்கு 12 வயதாக இருந்தபோது, அவரை "விரும்புவதாக" கூறி தகாத செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளார். மேலும், சிறுமியின் நண்பர் ஒருவரின் அறிவுரையின் படி, பாதிக்கப்பட்டவர் இறுதியாக இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் என அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த தொடர் பாலியல் வன்கொடுமைகள் எப்போது தொடங்கின என்று அந்த சிறுமியால் துல்லியமாகக் கூற முடியவில்லை. ஆனால் அப்போது தனக்குச் சுமார் 13 வயது இருந்ததாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்த பாலியல் வன்கொடுமை அதாவது, “கிட்டத்தட்ட தினமும்” தொடர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்தபோது அவருக்கு எவ்வளவு வயது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் மாநில புலனாய்வாளர்கள் ஸ்பென்சரை கைது செய்து, சமீபத்திய ஆபாச செய்திகள் குறித்து அவரிடம் விசாரித்துள்ளனர். வெறும் எட்டு மணி நேரத்திற்கு முன்புதான் அவை அனுப்பப்பட்டிருந்தபோதிலும், அவை தனக்கு நினைவில் இல்லை என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

மொத்தத்தில், ஸ்பென்சருக்கு எதிராக 5,538 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஸ்பென்சர் பாதிக்கப்பட்டவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கிளியர்ஃபீல்ட் கவுண்டியின் துணை மாவட்ட வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இந்த நபர் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில், வன்முறை அச்சுறுத்தலால் பாலியல் வன்கொடுமை செய்தல், சட்டரீதியான பாலியல் வன்கொடுமை மற்றும் பிற கொடூரமான குற்றங்கள் உட்பட தலா 300-க்கும் மேற்பட்ட பிரிவுகள் அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. குழந்தை ஆபாசப் படங்கள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசமான பொருட்களை விநியோகித்தல் தொடர்பான ஆறு வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் ஒவ்வொன்றிலும் 42 பிரிவுகளையும் ஸ்பென்சர் எதிர்கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சில குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வராமல் போகலாம், ஆனால் ஸ்பென்சருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தருவதே அரசுத் தரப்பின் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com