
பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான ராஜா, இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் ராஜா மீண்டும் மருவத்தூர் பகுதியை சேர்ந்த உமா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். உமா மற்றும் ராஜா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். உமா மற்றும் ரேவதி குடும்பத்தினர் அருகருகே வீடு எடுத்து தனி தனியாக வசித்து வருகின்றனர். ராஜா தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து இரண்டு குடும்பத்தையும் காப்பாற்றி வந்துள்ளார்.
பெரும்பாலும் ராஜா முதல் மனைவியான ரேவதி வீட்டிலேயே வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. உமா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதிலிருந்து ராஜாவுக்கும் ரேவதிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் ராஜா அடிக்கடி குடித்துவிட்டு வந்து ரேவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரேவதியை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த ரேவதியின் மூத்த மகனான 20 வயதுடைய ராசுக்குட்டி தனது தந்தையிடம் ரேவதியை அடிக்க வேண்டாம் என வாக்குவாதம் செய்துள்ளார் எனவே இது தனத்தை மகனுக்கு இடையிலான பிரச்சனையாக மாறியுள்ளது.
பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் அ.மேட்டூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலையை வைத்து அலங்கார ஏற்பாடுகளை, ராசுகுட்டியும், அவர்களது நண்பர்களும் செய்தனர். பின்னர் அதே பகுதியில் ராசுகுட்டி, அவரது நண்பர்களுடன் படுத்து தூங்கினார். அதிகாலை அங்கு சென்ற ராஜா, கடப்பாரையால் ராசு குட்டியின் தலையில் அடித்து, அவரை கொலை செய்தார். இதனை பார்த்த ராசுக்குட்டியின் நண்பர்கள் சத்தமிடவே அப்பகுதியிலிருந்து ராஜா தப்பித்து சென்றார்.
எனவே ராசுக்குட்டியின் நண்பர்கள் போலீசில் புகாரளித்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசை ராசு குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மகனை கொலை செய்துவிட்டு மருவத்தூரில் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் பந்தலிலே வைத்து தந்தை மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.