

திருப்பரங்குன்றம் திருமலையூர் சேர்ந்த முருகேசன். இவரது மகன் அறிவரசன் (வயது 40) கப்பலூரில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜய பாரதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக இவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அறிவரசனின் கொழுந்தியா சிவரஞ்சனிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சிவரஞ்சனி வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தகவல் அறிந்த அறிவரசன் கொழுந்தியா சிவரஞ்சனியை போனில் அழைத்து கண்டித்து, “ஒழுங்காக வாழ வேண்டும்” என அறிவுரை கூறியுள்ளார்.
இதில் கோபம் அடைந்த சிவரஞ்சனி தனது கள்ளக்காதலன் சௌந்தரிடம் கூறி புலம்பியுள்ளார். ஆத்திரம் அடைந்த சௌந்தர் நேற்று மாலை 5 மணி அளவில் கருப்பு கலர், பொலிரோ வாகனத்தில் ஆயுதங்களுடன் மூன்று நபர்களை அழைத்து வந்துள்ளார். அறிவரசன் வீட்டில் அவருடைய மகன் மட்டுமே இருந்துள்ளார். அப்போது “உங்க அப்பா எங்கடா?” என சௌந்தர் கேட்க “அப்பா பாத்ரூம் சென்று உள்ளார்” என சிறுவன் கூறியுள்ளான். அந்த கும்பல் பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே இருந்த அறிவரசனை இழுத்து கீழே தள்ளி அடித்துள்ளனர். மேலும் கொண்டு வந்த ஆயுதங்களால் தாக்கியும், கத்தியால் குத்தியும், வெட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அறிவரசன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
இதனை கண்ட அவரின் மகன் “அப்பாவை வெட்டுகிறார்கள்” என கத்தியுள்ளார். சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விடுவார்கள் என, செளந்தர் மற்ற 3 நபர்கள் காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர். அதன் பின்பு அங்கிருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது அறிவரசன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பலத்த காயம் அடைந்த அறிவரசனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நண்பர்களுடன் வந்தவர் அறிவரசன் கொழுந்தியாவின் ஆண் நண்பர் என்பதும், அவர் கொடுத்த தகவலின் படியே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து இதில் வேறு யாரேனும் தூண்டுதலாக இருந்தார்களா ள்ளது உடந்தையாக இருந்தார்களா என்பது போன்ற தவிர விசாரணை நடந்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.