“அவன் கூட பேசாத” - கள்ளக்காதலனோடு சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை கொலை செய்த பெண்! காவிரி ஆற்றில் சாக்குமூட்டையில் கிடந்த ஆண் சடலம்

கள்ளக்காதலன் சேகருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்
salem murder
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது  குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வந்தனர்.

கூனாண்டியூர் காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையொன்று துர்நாற்றத்துடன் மிதந்தது.  மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த மூட்டையை மீட்டு பிரித்தபோது அதில் வாலிபர் ஒருவர். கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாக இருந்தது தெரியவந்தது. யாரோ அவரை கொலை செய்து, அதை திசை திருப்புவதற்காக ஆற்றில் வீசி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

அதையடுத்து மேட்டூர் அருகே கூனாண்டியூர் கழுத்தை அறுத்து கொலை செய்து காவிரி ஆற்றில் சாக்கு முட்டையில் வீசிய வழக்கில், நடத்திய விசாரணையை மூலம் மூன்று நபர்களை கைது செய்துள்ளது மேச்சேரி காவல்துறை. சம்பவ இடத்திக்கு வந்த டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் விசாரணையில், உயிரிழந்த நபர் மேச்சேரி சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த சேட்டு (45) என தெரிய வந்தது. இவர், கேரளாவில் உள்ள பேக்கரியில் முறுக்கு சுடும் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி (50), கூனாண்டியூர் சுந்தர்ராஜ் (எ) சேகர் (42), மேச்சேரி அஜீத் (49) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி போலீசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் சேட்டு மற்றும் ஜோதி இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்த  வந்துள்ளனர். சில மாதங்களாக ஜோதி சேட்டுவிடம் பழகுவதை நிறுத்திவிட்டு, வேறொரு நபரான கூனாண்டியூரை சேர்ந்த சேகரிடம் பழகி வந்துள்ளார். அதையடுத்து சேட்டு உடனான பழக்கத்தை துண்டிக்க முடிவு செய்துள்ளது, அவரை தவிர்த்தும் வந்துள்ளார். 

இந்நிலையில் ஜோதியை, சேட்டு அடிக்கடி சேகரின் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு மிரட்டி வந்துள்ளார். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என கள்ளக்காதலன் சேகருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார் ஜோதி. வீட்டுக்கு வரவழைத்து சேட்டு கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர், பிளாஸ்டிக் சாக்கு பையில் போட்டு கட்டி , வீடு மாற்றுவதற்கு வாகனம் தேவைப்படுகிறது எனக்கூறி கூனாண்டியூரை சேர்ந்த அஜித் என்பவருடன் வாகன உதவி கேட்டுள்ளார். அதையடுத்து அந்த மூட்டையை யாருக்கும் தெரியாமல் ஆற்றில் வீசி விட்டு வந்துள்ளனர். 

விசாரணையில் தெரியவந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சேட்டுவை கொலை செய்த ஜோதி, சேகர் மற்றும் வாடகைக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற அஜீத் ஆகியோரை போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com