வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய காவலர்.. தாயை கொலை செய்வதாக மிரட்டி 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் வன்கொடுமை!

"நீ என்னுடன் தான் இருக்க வேண்டும்” என கூறி அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
pocso case
Published on
Updated on
1 min read

சென்னை தலைமை செயலக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேல்முருகன் (48). இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். வேல்முருகனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2012 ஆண்டு விவாகரத்து ஆன வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஓரே வீட்டில் வசித்து வருகிறார். காவலர் வேல்முருகனை இரண்டாவது தினமும் செய்து கொண்ட பெண்ணுக்கு 21 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் 21 வயதுடைய அந்த பெண் தனது இரண்டாவது தந்தையும் காவலருமான வேல்முருகன் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில் தனது தாய் 2010 ஆண்டு முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு 2012 ஆண்டு காவலர் வேல் முருகனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்நிலையில் தனக்கு 17 வயது இருக்கும் போது இரண்டாவது தந்தையான வேல்முருகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக வேல்முருகன் தொடர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால் தான் கருவுற்றதாகவும், 2022 டிசம்பர் மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வேல்முருகன் கருவை கலைத்தாக புகாரில் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி இது குறித்து வெளியே சொன்னால் உன் தாயையும், அண்ணனையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்தாக புகாரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சினாப் சாட் மூலம் பெங்களூரை சேர்ந்த ஒரு வாலிபருடன் அறிமுகமாகி ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், தனது காதல் விவகாரம் தந்தை வேல்முருகனுக்கு தெரியவர “நீ ஏன் அவனை காதலிக்கிறாய், நீ என்னுடன் தான் இருக்க வேண்டும்” என கூறி அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் காயமடைந்த நான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று‌ வந்ததாகவும், எனவே 17 வயதில் இருந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்து கருவை கலைக்க வைத்த காவலர் வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் காவலர் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவலர் வேல்முருகனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாவது மனைவியின் மகளை 5 வருடங்களாக தலைமை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com