

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைதியை அழைத்து வரும்போது காவலருக்கு கத்திக்குத்து.கைதி மற்றும் காவலர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு.
குற்றவாளிகளை அழைத்துச்செல்வது ஆபத்தான வேலை என்றாலும் சில சமயங்களில் நம்மையும் மீறி சில குற்றச்சம்பவங்கள் நடந்துவிடும். போலீஸ் மீது தாக்குதல் நடத்துவது மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிந்தும் சில பதிவேடு குற்றவாளிகள் தப்பிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இந்த காரணத்தினால் அவர்மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரும் சிவகாசி அருகே உள்ள அச்சகத்தில் மரியராஜ் பணிபுரிந்து வருவதாக தகவல் அறிந்து அவரை அழைத்து வருவதாக சென்றுள்ளனர். மரியராஜை காவலர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துகொண்டிருந்தனர். அப்போது சிவகாசி ஶ்ரீவில்லி புத்தூர் பிரதான சாலையில் வந்தபோது மரியராஜ் தான் வைத்திருந்த கத்தியால் வினோத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்து இருசக்கர வாகனத்தில் இருந்து மூவரும் கீழே விழுந்துள்ளனர்.
காவல்துறையினர் தன்னை தாக்கி விடுவார்கள் என அஞ்சிய மரியராஜ் அதே கத்தியை வைத்து தன்னை தாக்கிக் கொண்டுள்ளார். காயம் அடைந்த காவலர் மற்றும் மரியராஜ் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.