“ஒரே வீட்டில் மூவர் தற்கொலை” - குடும்பத்துடன் குடியேறிய அக்கா தம்பி.. கடன் தொல்லையால் விபரீதம்!

பொள்ளாச்சிக்கு வந்து குடியேறியதாகவும், கடனை திருப்பி செலுத்த முடியாத..
“ஒரே வீட்டில் மூவர் தற்கொலை” - குடும்பத்துடன் குடியேறிய அக்கா தம்பி.. கடன் தொல்லையால் விபரீதம்!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான முத்துகிருஷ்ணன். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டர் வேலை பார்த்து வந்தார். இவரது சகோதரிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயதுடைய மீனாட்சி மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஆகிய மூவரும் கடன் தொல்லை தாங்க முடியாமல் சில தினங்களுக்கு முன்பு இவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேரும் பொள்ளாச்சி P KS காலனியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடி வந்தனர் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தும் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருளை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் முத்துலட்சுமி ஆகிய இருவரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில்தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மீனாட்சியும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரிகள் மூவரும் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர்.

இவர்களால் வாங்கிய பணத்தை உரிய நேரத்தில் திரும்ப கொடுக்க இயலாத நிலையில் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. எனவே வேறு வழியின்றி மூவரும் தங்களது குடும்பத்துடன் பொள்ளாச்சிக்கு வந்து குடியேறியதாகவும், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் மன விரக்தியில் இருந்த மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லை தான் காரணமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com