
புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியின், பாரத ஜனதா கட்சியின் பொறுப்பாளராக இருப்பவர் உமா சங்கர் 40 வயதான இவர்,அதே பகுதியில் சாமி பிள்ளை தோட்டத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உமா சங்கரின் நண்பர், தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம், பகுதியில் உள்ள பாரிஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்ய நேற்றிரவு வீட்டில் இருந்து கருவடிக்குப்பம் புறப்பட்டு சென்றுள்ளார் உமாசங்கர்.
பிறந்தநாளில் முன்னேற்பாடுகளை செய்து முடிக்கவே இரவு 11 மணி ஆனா நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிற்கு செல்வதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, ஐந்து பைக்குகளில் வந்த 5 நபர்களுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கும்பல்.அவர்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்களை பயன்படுத்தி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த உமாசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனை அறிந்த வந்த உமாசங்கரின் மனைவி மற்றும் அம்மா அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாஸ்பேட்டை எஸ்.பி கலைவாணன் தலைமையிலான குழு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். அப்போது உடலை எடுத்து செல்ல மறுத்து உமாசங்கரின் அம்மன், மனைவி மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து லாஸ்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்