
புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த ஈஸ்வரன்,செல்வி தம்பதியரின் மகன் 23 வயதான தினேஷ் குமார். தினேஷ் அவரது இரு நண்பர்களுடன் கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முகிலனுக்கு இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் முகிலனை அரிவாளால் தாக்கியுள்ளனர்.
இதில் முகிலனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் முகிலன் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும் தினேஷ் மீது கோபம் குறையாமல் இருந்துள்ளார் முகிலன். இந்நிலையில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார் தினேஷ்.
இதனை அறிந்து கொண்ட முகிலன் நேற்று முன்தினம் தினேஷ் இருக்கும் இடத்திற்கு தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சென்று தினேஷின் தலையில் அரிவாளால் வெட்டி அருகில் இருந்த காளாக் குளத்தில் வீசி விட்டு சென்றுள்ளனர். பின்னர் தினேஷின் வெட்டப்பட்ட இடத்திலிருந்து கசிந்த ரத்தம் குளத்தின் தண்ணீரில் கலந்து நீர் நிறம் மாறியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் முகிலன் அவரது மூன்று நபர்களுடன் போலீசில் சரணடைந்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தினேஷை கொலை செய்த முகிலன் என்பவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்