

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த யாசகர்கள் யாசகம் பெறுவதற்காக அப்பகுதியிலேயே தங்கி யாசகம் பெற்று அதில் வரும் பணத்தில் உண்டு வாழ்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி யாசகம் பெறும் யாசகர்கள் தங்க இடம் இல்லாமல் கடந்த (டிச 2) ஆம் தேதி இரவு பொன்னமராவதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தங்கியுள்ளனர். மீண்டும் காலை எழுந்து பார்த்த போது அப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்திருக்கிறார்.
இதனை பார்த்த யாசகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்த பெண்ணின் உடலை போலீசார் பொன்னமராவதி கிராம நிர்வாக அலுவலர் பச்சையப்பன் உதவியுடன் அடக்கம் செய்த நிலையில் . மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வெளியான பிரேத பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அப்போது போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் திருச்சி மாவட்டம் ஆவூரைச் சேர்ந்த நூர்ஜஹான் என்பது இவர் தனது குடும்பத்தை பிரிந்து இங்கு யாசகம் கேட்டு வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் அதே குழுவில் யாசகம் பெறும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 61 வயதான சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த நூர்ஜஹானை (டிச 01) ஆம் தேதி இரவு சதீஷ்குமார் உடலுறவுக்கு அழைத்ததும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சதீஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொன்னமராவதி காவல்துறையினர் கைது செய்து சதீஷ்குமாரை சிறையில் அடைத்தனர். யாசகம் கேட்கும் பெண் உடலுறவுக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.