பேத்தியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா.. மூன்று மாத கருவுடன் போலீசில் புகாரளித்த சிறுமி!

தனிமையில் இருப்பதை அறிந்த ராசு மீண்டும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்..
RAMANATHAPURAM POCSO (RASU)
RAMANATHAPURAM POCSO (RASU)
Published on
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் 15 வயது மகளும் அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராகவும், சிறுமியின் தாய்வழி தாத்தாவுமான 73 வயதுடைய ராசு, அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே சிறுமி அவரிடம் நன்றாக பேசி பழகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ராசு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் அச்சமடைந்த சிறுமி இது குறித்து உடனடியாக தனது தாயிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரனின் மனைவி ராசுவை கண்டித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு தனது செயல்களை நிறுத்தாத ராசு, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாமால் சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்த ராசு மீண்டும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை அறிந்த சிறுமியின் தாய் மற்ற உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்த நிலையில் அவர்கள் ராசுவை சரமாரியாக தாக்கி கண்டித்திருக்கின்றனர்.

Admin

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியை அவரது தாய் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாயும், சிறுமியும் உடனடியாக காவல்துறையை நாடி புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 73 வயதுடைய ராசு மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் தீவிர விசாரணையில் பலமுறை சிறுமியை மிரட்டி அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் தெரியவந்தது. தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக 73 வயது தாத்தா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com