
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 49 வயதான சுமை தூக்கும் தொழிலாளி சித்திரை கண்ணன். இவர் அதே பகுதியை அருண்குமார் என்பவரின் தாய் மற்றும் சித்தியிடம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தல ஐம்பது ஆயிரம் என ஒரு லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் கடனை திரும்ப தராத கண்ணனிடம் அருண் குமார் தங்களது பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளார்.
எனவே அருண்குமாருக்கும் கண்ணனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது எனவே கண்ணன் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விரைவில் அருண்குமாரின் கடனை அடைத்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் போலீசார் கண்ணனை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனால் சில மாதங்கள் பணம் கொடுத்த கண்ணன் பிறகு வழக்கம் போல பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அருண் குமார் கண்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கண்ணன், அருண் குமாரின் தாய் மற்றும் அவரது சித்தியை அவதூறாக பேசினார் என சொல்லப்படுகிறது. இதனால் அருண் குமார் மற்றும் கண்ணனுக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டு அடித்துக் கொண்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் தனது தாய் பற்றி அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாத அருண் கண்ணனை கொலை செய்ய எண்ணியுள்ளார்.
அதன்படி (ஜூலை 19) தேதி இரவு வேலை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கண்ணனை இருசக்கர வாகனத்தில் சென்ற அருண் அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். அருணிடம் இருந்து தப்பிக்க கண்ணன் அப்பகுதியில் இருந்த கடைக்குள் சென்றுள்ளார். இருப்பினும் விடாமல் துரத்திய அருண் கடன் “வாங்கிட்டு தப்பாவும் பேசுவியா” என கேட்டு கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.இதனால் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற அருணை தேடி வந்த நிலையில் நேற்று அவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.