“நீ என்னை லவ் பண்ணி தான் ஆகணும்” - தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்த மாணவன்.. பத்தாம் வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

மாணவன் மீது ஒழுங்கின நடவடிக்கை எடுத்து பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்...
“நீ என்னை லவ் பண்ணி தான் ஆகணும்” - தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்த மாணவன்.. பத்தாம் வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
Published on
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரியா என்பவரின் மகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவன் மாணவியை வகுப்பறையில் தினமும் நோட்டமிட்டு வந்த நிலையில் காதலிப்பதாக மாணவியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி மாணவனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இருப்பினும் மாணவன் தொடர்ந்து வகுப்பறையில் மனைவியிடம் பேசுவது தன்னை காதலிக்குமாறு கேட்பது மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மாணவி செல்லும் இடத்திற்கு செல்வது என தொடர்ந்து காதல் தொல்லை செய்து வந்திருக்கிறார். எனவே ஆத்திரமடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவியின் பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில் மாணவன் மீது ஒழுங்கின நடவடிக்கை எடுத்து பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். இருந்த போதிலும் திருந்தாத மாணவன் மாணவி பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் வீதியில் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து “நீ என்னை லவ் பண்ணி தான் ஆகணும்” என் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது.

Admin

இந்த நிலையில் மாணவனின் மிரட்டலுக்கு பயந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சக மாணவன் காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர் செய்ததால் தன்னுடைய மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாயாரும் உறவினர்களும் கதறி அழுக காட்சி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் சாவுக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் போராடிய நிலையில் போலீசார் சமாதானம் செய்து மனைவியின் உடலை ஒப்படைத்துள்ளனர்.

(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com