உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் 40 வயதுடைய அமன்தீப் கவுர் என்ற பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுக்விந்தர் சிங் என்பவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் அமன்தீப் கவுருக்கு லாரி ஓட்டுநர் பல்விந்தர் சிங் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து இருவரும் கடந்த மூன்று வருடங்களாக உறவில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் அமன்தீப் கவுர், இந்த உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்து பல்விந்தர் சிங்கிடம் “இனிமேல் நீ என்னை பார்க்க வரவேண்டாம்.. என்னை செல்போனிலும் தொடர்ப்புக்கொள்ளாதே” என கூறியுள்ளார். ஆனால் உறவை தொடர நினைத்த பல்விந்தர் சிங் பலமுறை காதலியை சமாதானப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இருப்பினும் அமன்தீப் கவுர் மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த பல்விந்தர் பழகி போது எடுத்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் தன்னுடன் தனிமையில் இருந்த வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்பிவைப்பதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமன்தீப் கவுர் குடும்பத்தினருக்கு இந்த உறவு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல்விந்தர் சிங்கை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். அதன்படி கடந்த (ஜூலை -10) ஆம் தேதி குன்னா பாபா குருத்வார் என்ற பகுதிக்கு அப்பால் உள்ள ஒரு கால்வாய் அருகே, பல்விந்தர் சிங் லாரிக்குள் ஓய்வெடுத்து கொண்டிருப்பதை அறிந்த அமன்தீப் கவுர் அப்பகுதிக்கு சென்று லாரியின் கேரேஜ் பகுதியில் இருந்த பல்விந்தர் சிங்கை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர் கொலையை மறைக்க நினைத்து லாரியின் மீது டீசல் ஊற்றி எரித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உயிரிழந்த பல்விந்தர் சிங்கின் சகோதரர் குர்மீத் சிங் கடந்த (ஜூலை 24) ஆம் தேதி தனது அண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக புகாரளித்திருக்கிறார். அதனை தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கை மாற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அமன்தீப் கவுர், பல்விந்தர் சிங்கை கொலை செய்தது தெரியவந்தது. எனவே நேற்று அவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். விபத்து போல சித்தரித்து கொலை செய்த சம்பவம் 40 நாட்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்