“மூன்று வயது மகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை” - திருமணத்தில் கொடுக்கப்பட்ட 27 சவரன்.. மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமை!

அதிக செலவு செய்கிறார், எதற்கெடுத்தாலும் பிடிவாதமாக இருக்கிறார் என்று தனது பெற்றோரிடம்..
“மூன்று வயது மகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை” - திருமணத்தில் கொடுக்கப்பட்ட 27 சவரன்.. மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமை!
Published on
Updated on
2 min read

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தண்டலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் 30 வயதுடைய வினோத். இவர் ஐடி கம்பெனி ஊழியராக பணியாற்றி வருகின்றார் . இவரது மனைவி 26 வயதுடைய நிவேதா இவரும் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெண் வீட்டார் 27 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்துள்ளனர். வினோத் மற்றும் நிவேதா தம்பதியருக்கு மூன்று வயதில் ரியா என்ற பெண் குழந்தை உள்ளது. அதன் பின்னர் சொந்த ஊரான தண்டலம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிவேதாவுக்கு பெற்றோர் இல்லாத நிலையில் அண்ணன் மட்டும் உள்ளார். எனவே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிவேதா சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளார். பின்னர் கணவர் வீட்டு தரப்பினர் நிவேதா மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த மாதம் நிவேதாவை தண்டலத்துக்கு அழைத்து வந்தனர்.

சமாதானம் செய்து அழைத்து வந்த பிறகு நிவேதா அதிக செலவு செய்கிறார், எதற்கெடுத்தாலும் பிடிவாதமாக இருக்கிறார் என்று தனது பெற்றோரிடம் வினோத் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வினோத் ஒர்க் பிரம் ஹோம் என வீட்டின் ஒரு அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை ரியாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் வினோத்தின் பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனவே நிவேதா வீட்டின் மற்றொரு அறையில் தனியாக இருந்துள்ளார்.

Admin

குழந்தையை கிளினிக்கிற்கு அழைத்து சென்று விட்டு வினோத்தின் பெற்றோர்கள் வீடு திரும்பிய போது நிவேதாவின் அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது. எனவே சந்தேகத்தின்பேரில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது நிவேதா வீட்டில் தூக்கு மாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசருக்கு தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Admin

இதற்கிடையே நிவேதாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு வந்து, நிவேதா இறப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com