“ரேபிடோ ஓட்டுநர் செய்த பாலியல் அத்துமீறல்” - வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பயணி.. பெண்களே உஷார்!

இளம்பெண்ணை கல்லூரியில் விட வந்த லோகேஷ் அவரை வாகனத்தில் ஏற்றி செல்லும் போது தனது...
“ரேபிடோ ஓட்டுநர் செய்த பாலியல் அத்துமீறல்” - வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பயணி.. பெண்களே உஷார்!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், பெங்களூர் உல்லால் பகுதியை சேர்ந்தவர் 28 வயதுடைய லோகேஷ். இவர் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாத காரணத்தால் அதே பகுதியில் ரேபிடோ ஓட்டிவந்தார். பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் பெங்களுருவில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் பெரும்பாலும் பயனர்களுக்கு தற்போது ரேபிடோ பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். அதே போல வெளிமாநிலத்திலிருந்து வந்து பெங்குளுரு சுதாமாநகரில் உள்ள விடுதியில் தங்கி “cabin crew” படித்து வருபவர் 20 வயதுடைய இளம் பெண் இவர் தினந்தோறும் விடுதியில் இருந்து கல்லூரிக்கு ரேபிடோ புக் செய்து சென்று வந்துள்ளார்.

அவ்வாறு கடந்த (நவ 06) தேதி காலை கல்லூரிக்கு செல்வதற்காக இளம் பெண் ரேபிடோ புக் செய்துள்ளார். இந்த சவாரியை எடுத்து இளம்பெண்ணை கல்லூரியில் விட வந்த லோகேஷ் அவரை வாகனத்தில் ஏற்றி செல்லும் போது தனது கைகளை வைத்து பெண்ணை தேவையற்ற இடங்களில் உரசி பாலியல் சீண்டல் செய்துள்ளார். முதல் முறை தெரியாமல் கைப்பட்டிருக்கும் என நினைத்து அமைதியாக இருந்த பெண் பின்னர் தொடர்ந்து அதே போல செய்ததால் அதிர்ச்சியடைந்து பலமுறை வாகனத்தை நிறுத்த கூறியுள்ளார் இருப்பினும் தொடர்ந்து நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டே லோகேஷ் பெண்ணிடம் அத்துமீறிய உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் தான் வைத்திருந்த இளம் பெண் தான் வைத்திருந்த மொபைல் போனை பயன்படுத்தி லோகேஷ் தன்னிடம் அத்துமீறுவதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் கல்லூரி வந்ததும் இறங்கி சென்ற இளம் பெண் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகிய நிலையில் பலரும் அந்த ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து வந்த நிலையில் இளம் பெண் ஓட்டுநர் குறித்து புகாரளித்துள்ளார்.

புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு ரேபிடோ ஓட்டுநர் லோகேஷை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பெங்களுருவில் படிக்கச் வந்த இளம்பெண்ணிடம் ரேபிடோ ஓட்டுநர் அத்துமீறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com