ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய வேண்டும்..! காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா .....
rithanya suicide
rithanya suicide
Published on
Updated on
1 min read

இந்தியாவில் வரதட்சணை கொடுமை உட்பட பல வன்முறைகள் தினம் தினம் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன, ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை வழக்காக்கப்படுவதில்லை, அப்படி ஒருவேளை வழக்காக மாறினாலும் தாமதமாக்கப்படும் நீதியால், எந்தப் பயனும் இல்லை.

நாட்டையே உலுக்கிய மிக முக்கியமான விவகாரம்தான்  வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கு.  இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கவின்குமார் மற்றும் பெற்றோருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் பெற்று வீடு திரும்பிய போது, வீட்டில் ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ரிதன்யாவின் இரண்டு மொபைல் ஃபோன்களை ஆய்வு செய்ய காவல்துறையினரிடம் கூறியபோது அவர்கள் மறுத்து விட்டதாகவும் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசிய விவரங்கள் போனில் இருப்பதால் அந்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கவின் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

மொபைல் போன்களை புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யும் படி காவல்துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com