சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் பல்வேறு மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் சமையலராக அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வியும், என்பவரும் துப்புரவு பணியாளராக ராதிகாவும் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ராதிகாவின் கள்ளகாதலனான ரகுபதி அடிக்கடி விடுதிக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதிக்கு வந்த ரகுபதி, ராதிகா மற்றும் கலைச்செல்வி ஆகியோருடன் சேர்ந்து இரண்டு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும், மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மது மற்றும் போதைப்பொருள் கலந்துகொடுத்து, அவர்களை தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவிகளின் பெற்றோர் அவர்களை சந்திக்க விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராதிகா மற்றும் ரகுபதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கலைச்செல்வியின் பங்கு என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு மாணவிகளுக்கு மட்டுமே இதுபோன்ற தொந்தரவு நடந்ததா அல்லது விடுதியில் தங்கியுள்ள வேறு மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அரசு மாணவியர் விடுதிக்குள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விடுதியில் மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதை பள்ளிக்கல்வி துறை மற்றும் சமூக நீதி துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மாணவிகளின் பாதுகாப்புக்காக விடுதியின் மேலாளர்கள் இரவு நேரங்களில் விடுதியில் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்