

கரூர் மாவட்டம், குளித்தலை வையாபுரி நகரில் வசிக்கும் லட்சுமணன் என்பவரது மகன் 21 வயதுடைய புகழேந்தி. இவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டதாக சொல்லப்படும் நிலையில் அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழ வகைகள் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் வீட்டு புதுமனை புகுவிழாக்கு சென்ற போது அங்கு வந்திருந்த உறவுக்காரனா பெண்ணான 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் புகழேந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தொடர்ந்து நேரில் சந்தித்து பேசுவது மற்றும் போனில் பேசிக் கொள்வது என பழகி வந்த நிலையில் இவர்களின் பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்தனர். அப்போது கடந்த செப்டம்பர் மாதம் புகழேந்தியின் ஊரில் அம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள முடிவெடுத்த சிறுமி அவரது வீட்டில் பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு புகழேந்தி வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு சென்று வந்த நிலையில் சிறுமி புகழேந்தியுடன் அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது “திருவிழாவுக்கு வந்து ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கல” என கூறி சிறுமியை வற்புறுத்தி புகழேந்தி அவருக்கு முத்தம் கொடுப்பது போலவும், நெருக்கமாக இருப்பது போலவும் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் சிறுமிக்கு பள்ளிக்கு செல்லாமல் புகழேந்தி வீட்டிற்கு சென்றது மாணவியின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிறுமி மற்றும் புகழேந்தி காதலிப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவியின் பெற்றோர் அவர்களது மகளை அழைத்து “புகழேந்தி உனக்கு அண்ணா உறவு அதனால இனிமே நீங்க காதலிக்கிறதை நிறுத்திக்கோங்க எதோ சின்ன பசங்க தெரியமா பண்ணிட்டீங்க” என கூறியுள்ளார். எனவே மாணவி புகழேந்தியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து மாணவியிடம் தொடர்ந்து பேச புகழேந்தி முயற்சிசெய்துள்ளார்.
அதற்கு மாணவி மறுத்து வந்த நிலையில் சிறுமி பள்ளிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று பேசிய போது “நீ என்னை காதலிக்க வில்லை என்றால் இருவரும் பழகியபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிடுவேன்” என மிரட்டியுள்ளார். இதற்கு மாணவி எந்த வித பதிலும் அளிக்காத நிலையில் மாணவியுடன் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் இது குறித்து சிறுமி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த மகளிர் போலீசார் மாணவியை வற்புறுத்தி புகைப்படம் எடுத்ததற்காகவும், காதலிக்க சொல்லி தொல்லை செய்ததற்கும், மனைவியின் அனுமதி இல்லாமல் அவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்கு வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் புகழேந்தியை கைது செய்து கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.