“ஆண் குழந்தை கேட்டு டார்ச்சர் செய்த கணவர்” - கோபத்தில் தந்தை வீட்டிற்கு சென்ற மனைவி.. தன்னுடன் வாழ மறுத்ததால் மாமனாரை கொன்ற மருமகன்!

அடுத்தடுத்து மேலும் இரண்டு முறையும் பெண் குழந்தையே பிறந்ததால் ஆண்குழந்தை வேண்டும் என நினைத்த மயில்சாமி ...
“ஆண் குழந்தை கேட்டு டார்ச்சர் செய்த கணவர்” - கோபத்தில் தந்தை வீட்டிற்கு சென்ற மனைவி.. தன்னுடன் வாழ மறுத்ததால் மாமனாரை கொன்ற மருமகன்!
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கொத்தபுல்லியானூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி. இவர் மேச்சேரி அருகே உள்ள திமிரிகோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய மயில்சாமிக்கு தனது மூத்த மகளான மகேஸ்வரியை கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். மகேஸ்வரி முதல் முறை கருத்தரித்த போது மயில்சாமி ஆண்குழந்தை தான் பிறக்க வேண்டும் என எதிர்ப்பது காத்திருந்துள்ளார் ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் இதனை காரணமாக வைத்து மகேஸ்வரியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

அடுத்தடுத்து மேலும் இரண்டு முறையும் பெண் குழந்தையே பிறந்ததால் ஆண்குழந்தை வேண்டும் என நினைத்த மயில்சாமி ஆத்திரம் அடைந்துள்ளார் எனவே அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி மகேஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். தகராறில் மகேஸ்வரி கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு வருவதும் மீண்டும் அவரை மயில்சாமி சமாதானம் செய்து அழைத்து செல்வதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கணவன் மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டு மகேஸ்வரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதனால் கோபமடைந்த மயில்சாமி நேற்று இரவு குடிபோதையில் தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் மகேஸ்வரி தன்னுடன் வர மறுத்து நிலையில் ஆத்திரமடைந்த மயில்சாமி தகராறில் ஈடுபட்டார். அப்பொழுது மகளுடன் பிரச்சனை செய்ய வேண்டாம் என மாமனார் பழனிச்சாமி தடுத்துள்ளார். இதனால் மாமனார் மருமகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்மயில்சாமி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் பழனிச்சாமியை சரமாரியாக குத்தியுள்ளார்.

Admin

இதனால் படுகாயமடைந்த பழனிச்சாமியை அக்கம் பக்கத்தில் இருந்த அவரது உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த பொழுது மருத்துவமனையில் பழனிசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இருந்த விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் பழனிச்சாமி உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வீட்டில் பதுங்கி இருந்த மயில்சாமியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மருமகனே மாமனாரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com